இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியை குறிக்கக்கூடிய கிரகமாக சந்திரன் உள்ளார். அவர் அமைந்திருக்கும் வீட்டைப் பொறுத்துதான் அந்த ஜாதகனுடைய மனநிலை மாறுகிறது. அந்த வகையில், ஒரு சில பெண்களை பார்த்திருந்தால் அவர்கள் மிகவும் ஆளுமை தன்மையோடு இருப்பார்கள்.
எப்பொழுதும் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். அந்த வகையில், எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

சிம்மம்:
இவர்கள் கணவன் சிறியதாக தப்பு செய்தாலும் அதை அவர்களால் மன்னிக்க முடிவதில்லை. கணவனை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், கணவனுடைய ஒவ்வொரு அசைவும் தனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று ஆளுமையோடு அன்போடும் இருக்கக் கூடியவர்கள்.
கன்னி:
கணவன் பெரிய தப்பு செய்த நேரங்களில் இவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். ஆனால், சிறிதாக ஒரு தப்பு செய்துவிட்டால் அதை மிகப்பெரிய அளவாக எடுத்துக் கொண்டு கணவனை ஒரு வழியாக்கி விடுகிறார்கள். மேலும், கணவன் எப்பொழுதும் தன் கண் பார்வையிலே இருக்க வேண்டும் என்று அதீத காதல் கொண்டவர்கள் என்றே சொல்லலாம்.
மீனம்:
இவர்களை பொருத்தவரை கணவன் தன் சொல் பேச்சை மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். தன் சொல்லை மீறி கணவன் ஏதாவது ஒரு செயலில் இறங்கி விட்டால் இவர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதில் தவறு நடந்துவிட்டால் நிச்சயமாக அதை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காலம் முழுவதும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |