அரசியலில் அடுத்து நடக்கப்போகும் பெரிய மாற்றம்.. பிரபல ஜோதிடர் ஷெல்வியின் கணிப்புகள்
தற்பொழுது தமிழ்நாட்டின் அரசியல் மிக பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் இருந்து பெரியவர்கள் வரை பேசப்பட்டு வருகிறது. கட்சி துவங்கி இரண்டு வருடங்களில் முதலமைச்சர் இடத்தை பிடித்த விஜய் அவர்கள் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
காரணம், விஜய் அவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாக இருந்ததாகவும் அரசியல் களத்தில் அவர் மக்கள் மத்தியில் பெயர் புகழ் எடுத்ததோடு மட்டுமல்லாமல் உயர்ந்த பதவியை அடைவதற்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் தோல்விக்கு காரணமாக சிம்ம ராசியில் நடந்த அஷ்டம சனியின் தாக்கம் என்பதே காரணம் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் புதிதாக இப்பொழுது அண்ணாமலை அவர்கள் அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் என்கின்ற பேச்சு அதிக அளவு பேசப்பட்டு வருகிறது.
அண்ணாமலை உடைய ஜாதகத்தை நாம் எடுத்து பார்க்கும்பொழுது அவருடைய ஜாதகமும் உயர் பதவியை அடைவதற்கான வலுவான ஜாதகம் என்றும் அவருக்கு தற்பொழுது சூரிய திசை நடக்கிறது என்பதால் பொறுமையாக அவர் செயல்படுவதாகவும் அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய அரசியலில் தடம் பதிப்பார் என்பதற்கான வாய்ப்புகள் அவர் ஜாதகத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ஜோதிட ரீதியாக பார்க்கின்ற பொழுது தற்பொழுது நடந்திருக்கக்கூடிய மாற்றம் மற்றும் அண்ணாமலையின் புது கட்சியின் துவக்கத்தை பற்றிய பேச்சு வார்த்தைகள் இவை எல்லாம் எதிர்காலத்தில் இன்னும் அதிகளவில் ஒரு பெரிய மாற்றங்களை அரசியலில் கொடுக்க கூடும் என்பதை நமக்கு கணித்து பல்வேறு அரசியல் ரீதியான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள். அதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.