காதலில் சில விஷயங்களை மறைக்கும் பெண்கள் - இந்த 3 ராசிகள்தான்
சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலரிடமிருந்து சில விஷயங்களை மறைக்கின்றனர்.
காதலில் வெளிப்படைத்தன்மைதான் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் அதிகரிக்கும். உறவுகளில் ரகசியங்களை கடைபிடிப்பது சில சமயங்களில் ஆறுதலாகவும், பெரும்பாலான சமயங்களில் ஆபத்தாகவும் மாறும்.
ஜோதிடத்தின்படி, சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலரிடமிருந்து சில விஷயங்களை மறைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
விருச்சிகம்
தங்கள் தனிப்பட்ட உலகத்தை மிகவும் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பார்கள். அவ்வாறு காதலிலும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறார்கள். அதற்கு காரணம் காதலரை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல, மாறாக சுய பாதுகாப்பு மற்றும் அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டின் அடையாளமாக பார்க்கின்றனர்.
மகரம்
உறவுகளில் எச்சரிக்கையாகவும், தந்திரமாகவும் இருக்கிறார்கள். எதை, யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் படிப்படியாக வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
கும்பம்
தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் மதிக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வழிவகுக்கிறது. இந்த இயல்பு தங்கள் துணையிடமிருந்து விஷயங்களை மறைப்பது பற்றியது அல்ல.. மாறாக அவர்களின் சுய உணர்வையும், தனித்துவத்தையும் பாதுகாப்பதாக நம்புகின்றனர்.