பெண்கள் மறந்தும் இந்த காலத்தில் கைகளில் மருதாணி வைக்காதீர்கள்
பெண்களுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்றால் மிகவும் பிடித்தமான விஷயமாகும்.அப்படியாக வீடுகளில் பெண்கள் ஏதேனும் விஷேசம் என்றால் மறக்காமல் கைகளில் மருதாணி வைத்துக்கொள்வார்கள்.மேலும் பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது என்பது மங்களகரமான விஷயம் ஆகும்.
கைகளில் மருதாணி வைப்பதால் நம் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெறமுடியும்.அதோடு மருதாணி குளிர்ச்சியான தன்மை கொண்டதால் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து விடும்.
அப்படியாக குளிர்ச்சி பொருந்திய இந்த மருதாணியை கர்ப்பகாலத்தில் பெண்கள் கைகளில் வைத்து கொள்ளலாமா?என்று சந்தேகம் வரும்.அதை பற்றி பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ர்ப்பிணி பெண்கள் கைகளில் மருதாணி வைக்காமல் இருப்பது நல்லது என்கிறார்கள்.அதாவது அந்த சமயத்தில் எந்த கிரகங்களின் தாக்கங்கள் அதிகரிக்கும் என்று சொல்லமுடியாது.
மேலும்,மருதாணி வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், பெண்ணின் ஜாதகத்தில் வீனஸ் பலவீனமாக இருந்தால் அந்தப் பெண் மருதாணி வைப்பது ஏதிர்மறை ஆற்றலை கொடுத்துவிடும்.இதனால் அவர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை கொடுத்து விடும்.
ஆதலால்,முடிந்த அளவு கர்ப்பிணி பெண்கள் அவர்களின் கர்ப்பகாலத்தில் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |