இந்த திகதிகளில் பிறந்த பெண்களை வெல்வது அசாத்தியம்... ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசியின் மூலம் எதிர்காலத்தையும், விசேட ஆளுமைகளையும் கணிக்கும் ஜோதிட சாஸ்திரம் போன்றே, எண்கணித சாஸ்திரமானது பிறப்பு எண் மூலம் ஒருவரின் எதிர்காலத்தை கணித்து கூறுகின்றது.
எண்கணித சாஸ்திரமானது தொன்று தொற்று புலக்கத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையான சாஸ்திர முறையாகும்.
அதன் பிரகாரம் ஒருவர் பிறப்பு திகதியானது அவர்களின் நேர்மறை,எதிர்மறை குணங்களில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் 12 மாதங்களில் எந்த மாதத்திலும் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்களை வெல்வது யாராலும் இயலாத காரியமாக இருக்கும் அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1
எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாகவும் பயம் என்ற நாமமே அறியாதவர்களாகவும் இருப்பார்கள்.
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்பகள் யாராலும் வீழ்த்த முடியாத அளவுக்கு தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். இவர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டிலே கணிக்கும் ஆளுமை கொண்டவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்க வேண்டும் என்ற குணம் இவர்களிடம் ஓங்கி காணப்படும்.
எண் 4
12 மாதங்களில் எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
எவ்வளலு கடினமாக சூழ்நிலையாக இருந்தாலும் பதற்றம் இன்றி தெளிவாக சமாளிக்கும் அசாத்திய திறமை இவர்களிடம் நிச்சயம் காணப்டும்.
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவுடையவர்களாக இருப்பார்கள். கையில் இருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவர்களிடம் காணப்படும் சமநிலையான குணம் மற்றவர்களால் இவர்களை வெற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு இவர்களை கொண்டு செல்கின்றது.
எண் 8
அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நீதி, நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடையவர்களாகவும் இருப்பார்கள்.
தங்கள் விருப்பத்தை முழுமையாக செயல்படுத்த எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் குணம் இவர்களிடம் காணப்படும்.
இவர்கள் நான் என்ற அகங்காரம் அற்றவர்களாக இருப்பார்கள். தாங்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.