இந்த 5 ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கொடுத்து வைத்தவர்களாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாம்.
காரணம், அவர்களுக்கு எவ்வளவு வேலை பளு இருந்தாலும் அவர்களுடைய மனைவியுடன் சரியான நேரத்தில் செலவிடக் கூடிய தன்மை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.
மிதுனம்:
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் அதை ஓரமாக வைத்துவிட்டு தங்களுடைய குடும்பத்தினருடனும் மனைவியுடனும் மகிழ்ச்சியாக பேசி சிரிக்க வைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
சிம்மம்:
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு என்ன தேவை என்பதை மனைவியிடம் கேட்பதற்கு முன்பாக இவர்கள் அதை நிறைவேற்றுகிறார்கள். அதேபோல் இவர்களுடைய மனைவிக்கு இவர்கள் ஆடம்பர பொருட்கள் கொடுப்பது மிகவும் பிடித்ததாக இருக்கிறது.
துலாம்:
இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு தங்கள் மனைவியுடன் சேர்ந்து வீட்டு வேலைகளை பகிர்ந்துக் கொள்வதும், மனைவிக்காக இவர்கள் நிறைய விஷயங்கள் பார்த்து பார்த்து செய்வதிலும் இவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
தனுசு:
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மனைவியை எப்பொழுதும் கலகலப்பான சூழ்நிலையில் வைத்துக் கொள்வார்கள். மனைவியை எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் வெளியே அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மீனம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மனைவியின் சின்ன கோபம் கூட சுத்தமாக பிடிப்பதில்லை. இவர்கள் மனைவியை சமாதானம் செய்யாமல் இவர்கள் ஒரு பொழுதும் தூங்க செல்வதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |