நீங்கள் பிறந்த மாதம் இதுவா? உங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 08, 2026 11:30 AM GMT
Report

ஜோதிடம் என்பது கிரகங்கள், எண்கள் மற்றும் ஒருவர் பிறந்த மாதம் இவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அப்படியாக ஒவ்வொருவர் பிறந்த மாதமும் அவர்களுடைய குணாதிசயங்களை பற்றி சொல்லக் கூடியதாக இருக்கிறது.

அப்படியாக, பெண்கள் குறிப்பிட்ட சில மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஆளுமையை பண்புடன் இருப்பார்கள். அவ்வாறு எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் பிறந்த மாதம் இதுவா? உங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா? | Women Personality According Birth Month

2026 மகாசிவராத்திரி: சிவபெருமான் அருளால் அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள்

2026 மகாசிவராத்திரி: சிவபெருமான் அருளால் அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள்

ஜனவரி:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதே போல் தோற்றத்தில் அழகாகவும் காணப்படுவார்கள்.

பிப்ரவரி:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த ஆளுமை பண்பு கொண்டிருப்பார்கள். அதேபோல் தந்திரமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுபவர்கள். மிகுந்த பாசமும் அன்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மார்ச்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் இயல்பான குணம் கொண்டவர்கள். மேலும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ரகசியங்களை மனதில் வைத்திருக்க மாட்டார்கள்.

ஏப்ரல்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். இவர்கள் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் விரும்புவார்கள். பிடிவாத குணம் சற்று அதிகம் இருக்கும்.

மே:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகுந்த பிடிவாதம் குணம் கொண்டிருப்பார்கள். எளிதாக ஒருவரிடம் பேசி விட மாட்டார்கள். இருப்பினும் எல்லோருக்கும் பிடித்தவர்கள் ஆகவும் இருப்பார்கள்.

ஜூன்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையை கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு ஊர் சுற்றி பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். கலை மற்றும் படைப்பாற்றலில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்

2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்

ஜூலை:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் நண்பர்களாக இருப்பதில் மிகச் சிறந்தவர்கள். ஒற்றுமையை விரும்புவார்கள். எளிதில் ஒருவரை மன்னிக்கக் கூடிய குணம் கொண்டிருப்பார்கள்.

ஆகஸ்ட்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தைரியமாக செயல்பட கூடியவர்கள். ஒருவரிடம் ஆளுமையை செலுத்துவதில் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும் , இசையில் இவர்களுக்கு அதிகம் ஆர்வம் இருக்கும்.

செப்டம்பர்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அவசர முடிவுகளை எடுத்து விடுவார்கள். பயம் இல்லாதவர்கள் என்றாலும் நிறைய சிந்திக்க கூடியவர்கள். நினைவாற்றல் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

அக்டோபர்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிகம் பேச விரும்ப மாட்டார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

நவம்பர்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தங்களுடைய விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்க கூடியவர்கள். வேலையில் நேர்மையாக இருப்பார்கள். தனித்துவமான குணம் கொண்டவர்கள்.

டிசம்பர்:

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக விசுவாசமும் இலட்சியமும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பாக பேசக் கூடியவர்கள். எதிர்காலத்தைப் பற்றிய நிறைய சிந்தனை கொண்டிருப்பார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US