உங்கள் மனைவிக்கு இந்த குணம் இருக்கா? அப்போ நீங்க அதிர்ஷ்டசாலிதான்
ஒரு ஆண் எத்தகைய குணங்களைக் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றால் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மனைவி குணம்
அறிவு என்பது கல்வியை பற்றியது மட்டுமல்ல வாழ்க்கையை புரிந்து கொள்வதும், சிறந்த முறையில் நடந்து கொள்வதும் பற்றியது. அத்தகைய குணங்கள் கொண்ட மனைவி எப்போதும் தனது கணவரை புரிந்து கொள்வாள். கடினமான சூழலில் சரியாக முடிவெடுக்கத் தெரிந்த அறிவுக் கூர்மை கொண்ட மனைவி கிடைத்தால் அந்த ஆணின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு பெண் தன் கணவரின் கனவுகள் மற்றும் இலக்குகளை ஆதரித்து அந்த பயணத்தில் உடன் இருந்தால் அந்த ஆண் எளிதில் வெற்றியைப் பெறுவார். இத்தகைய குணங்களைக் கொண்ட மனைவி கணவருக்கு எப்போதும் ஊக்கத்தை அளித்து அவரது தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்குவார்.
சாணக்கியர் கூற்று
கணவர் கோபப்படும் நேரங்களில் அல்லது குடும்பத்தில் சவால்கள் வரும் பொழுது அதை பொறுமையுடன் கையாளும் பெண்ணால் அந்த வீட்டில் எப்போது மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதே போல் கடுமையான சொற்களை பேசாமல் கனிவாகவும், எளிமையாகவும் பேசும் பெண்களை பெற்றப் ஆண் மிகவும் அதிர்ஷ்டசாலி.
உண்மையான அன்பும், விசுவாசத்துடனும் இருக்கும் பெண்கள் அமைப்பது மிகப்பெரிய பாக்கியம். இத்தகைய பெண்கள் எத்தகைய சோதனையிலும் கணவனை விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக இருப்பார்கள். நல்ல ஒழுக்கமும், ஆன்மீகத்தில் நம்பிக்கையும் கொண்ட பெண்கள் குழந்தைகளுக்கு சிறந்த நற்பண்புகளை கற்றுக் கொடுப்பார்கள்.