நம் வாழ்க்கையை மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் எது தெரியுமா ?
இந்த மனித பிறப்பு என்பது ஒரு நிலையற்ற ஒன்றாகும். எங்கு இருந்து இந்த உடல் வந்தது, எங்கு இருந்து இந்த உடலில் மறைந்திருக்கக்கூடிய உயிர் செல்கிறது என்பது எல்லாம் மாயை. இந்த இடைப்பட்ட காலங்களில் நாம் நம்முடைய கடமையை செய்து நமக்கு கொடுத்த சொந்தங்கள் உடன் வாழ்ந்து நாட்களை கழிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அப்படியாக இந்த மாயை வாழ்க்கையில் நாம் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தாலும், அந்த இன்னல்களை நாம் சந்திக்கும் பொழுது நம்முடைய மனம் எவரும் சொல்லிக் கொடுத்திடாமல் தேடிச் சொல்லும் ஒரே இடம் இறைவனாக தான் இருக்கிறார்.
அந்த வகையில் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல்கள், எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் மனதில் இறைவனை நிலைநிறுத்திக் கொண்டு இருந்தாலும் இந்த ஒரு மந்திரம் நம்மிடம் இல்லை என்றால் கட்டாயம் எந்த தெய்வமும் நமக்கு துணை நிற்காது. அவை என்ன மந்திரம் என்று பார்ப்போம். பக்தி என்பது வெறுமனே கடவுளை நம் மனதில் நினைப்பது அல்ல.
பக்தி என்பது இறைவன் எனக்காக வருவார் என்று முழுமையாக நம்பிக்கை கொள்வதே ஆகும். பக்தி என்று ஒரு விஷயம் ஒருவரிடம் இருக்கிறது என்றால் அனைவரும் இறைவனின் உயிர் என்ற உண்மை புலப்படும். இந்த உலகத்தில் பார்க்கின்ற எந்த ஒரு மனிதனும் வேறு அல்ல யாவரும் இறைவனுடைய குழந்தைகள் என்ற ஒரு பார்வை தோன்றி எல்லோரும் நம்முடைய சொந்தங்கள் என்ற உணர்வு உண்டாகும்.
இவைதான் உண்மையான பக்தி. இருப்பினும் என்னதான் இறைவனை மனதில் நாம் நிலை நிறுத்திக் கொண்டு வாழ்க்கையை கடந்தாலும் ஒரே ஒரு தாரக மந்திரம் நம்மிடம் இல்லை என்றால் எல்லா பக்தியும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும். அந்த மந்திரத்தின் பெயர்தான் "நம்பிக்கை".
எப்படி மகாபாரதத்தில் திரௌபதி தனக்காக கிருஷ்ணர் வருவார் என்று தீர்க்கமாக நம்பினாலே, அதேபோல் நம்முடைய இன்னல்கள் உச்சத்தை தொடும்பொழுது பகவான் எனக்காக கட்டாயம் வருவார் என்று தீர்க்கமாக நம்ப வேண்டும்.
அந்த அசைக்க முடியாத நம்பிக்கை எல்லாவற்றையும் மாற்றும். நம்முடைய நம்பிக்கை மட்டும் தான் சொல்லும் மந்திரங்களையும் நாம் கடவுள் மீது வைத்திருக்கக் கூடிய பக்தியையும் உண்மையாக்குகிறது.
ஆக பக்தி செலுத்துவதாலும், மந்திரங்கள் ஜெபிப்பதால் மட்டுமே நம்முடைய வாழ்க்கைமாறி விடாது. இதை நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே இறைவனை நாம் சரண் அடைய முடியும். அதனால் நம்புங்கள் காலம் மாறும் என்று. நம்புங்கள் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்று. இந்த உலகில் எதுவும் கடைசி நொடியில் அவன் அருளால் மாறக்கூடிய சாத்தியம் பெற்றது என்று. எல்லாம் அவன் செயல்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







