உங்கள் வாழ்க்கையில் அநீதி நடக்கும் பொழுது இதை கடைபிடியுங்கள்

By Sakthi Raj Sep 13, 2024 12:30 PM GMT
Report

வாழ்க்கையில் நாம் சிந்தித்து பார்க்க முடியாத அளவு ஏராளமான நல்ல மனிதர்களும் தீய குணங்கள் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.அவர்களிடம் இருந்து தப்பித்து வாழமுடியாது.ஏனினில் ஒவ்வொருவரின் சுயரூபம் சூழ்நிலை பொறுத்தே அமைகிறது.விதியால் ஏற்படுகின்ற ஏமாற்றம்,இழப்புகளை,வலியை,மனிதன் சற்று சுலபமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடைகிறான்.

ஆனால் மனிதன் மனிதனுக்கு ஏற்படுத்துகின்ற அநீதிகள் ஏமாற்றங்களை மனிதனால் அல்ல தெய்வத்தாலும் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படியாக சிலர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை அவர்களின் நல்ல மனதை அறிந்து சிலர் ஏமாற்றி விடுகின்றனர் துரோகம் விளைவிக்கின்றனர்.

அபப்டியானவர்கள் அந்த மனிதன் இழைத்த காயத்தினால் மிகவும் வ்ருத்தி துன்புறுவதோடு மட்டும் அல்லாமல்,தர்மம் வீழ்ந்து போனதே என்று மன குமுறலும் அவர்களிடம் நீங்கா வலியயை கொடுக்கும்.அந்த நேரத்தில் அவர்கள் பற்றி கொள்ளவேண்டியவர்கள் பெருமாள்.

உங்கள் வாழ்க்கையில் அநீதி நடக்கும் பொழுது இதை கடைபிடியுங்கள் | Worship Of Perumal

தர்மத்தின் முழு அவதாரம் பெருமாள்.பெருமாளை இடைவிடாது வணங்க கண்டிப்பாக தர்மம் நியாயம் உங்கள் பக்கம் நின்று ஜெயிக்கும்.மேலும் தர்மம் ஜெயிக்க நமக்கு கூடுதல் தெம்பும் தைரியமும் பிறக்க அடுத்த நாம் பற்றி கொள்ளவேண்டியவர் நரசிம்மர்.பக்தன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த நரசிம்மரை வணங்க வாழ்க்கையில் துன்பம் இல்லை இன்பம் மட்டுமே.

மேலும் நாம் ஒரு தைரியமான நபராக மாறுவதை பார்க்க முடியும். ஆக திருமாலின் கரங்களை பற்றியவருக்கு எந்த சூழ்நிலையிலும் அதர்மம் ஜெயித்து தர்மம் தோற்றதாக வரலாறு இல்லை.

நாகபட்டினத்தின் சக்தி வாய்ந்த கோயில்களின் பட்டியல்

நாகபட்டினத்தின் சக்தி வாய்ந்த கோயில்களின் பட்டியல்


ஆக மனம் குழம்பி வீண் வம்பு வழக்குக்குள் என்று அவதி படுபவர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாளின் திருவடியை பற்றி முடிந்தால் பெருமாள் மந்திரங்கள் சொல்லி வழிபட ஆரம்பிக்க வெற்றி நிச்சயம்.

மேலும் வாழ்க்கையை பற்றி படிக்க வேண்டுமா?புரிதல் வேண்டுமா?பெருமாளை பற்றி படியுங்கள்.உலகத்தை தன்னுள்ளே வைத்து இயக்கம் கொண்டு இருக்கும் பெருமாளை படித்தால் வாழ்க்கை மீது நாம் கொண்டுள்ள பார்வை மாறும்.நீங்களும் மாறுவீர்கள்.

ஓம் நமோ நாராயணாய

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US