தீராத நோய்களையும் தீர்க்கும் இறை வழிபாட்டு ரகசியம்
ஒரு மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தை இழந்து விட்டால் நிச்சயம் அதை அவனால் மீட்டு பெற முடியாது. அந்த வகையில், பாலாறு சுவாமிகள் அவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோய்களிலிருந்து விடுபடுவதற்கும் ஆன்மீகம் மற்றும் ஜோதிட பரிகாரங்களை சொல்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய ஆறாம் பாவம் என்பது நோய், கடன் மற்றும் எதிர்ப்புகளை குறிக்கக்கூடியது.

நாம் ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்வதன் வழியாக அவர்களுக்கு எந்த மாதிரியான நோய்கள் வர இருக்கிறது என்பதையும், அதை தவிர்க்க எந்த மாதிரியான உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் நாம் முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியும். நோய் தாக்கத்தை குறைக்க முருகப்பெருமான் மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்வது மிகச் சிறந்தது.
குறிப்பாக கடுமையான உடல்நல பாதிப்புகள் இருக்கும் பொழுது ஒருவர் 'மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை' ஒலிக்க செய்வது அல்லது பாராயணம் செய்வது என்பது அவர்களுடைய மன பயத்தை போக்கியும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஒருவர் உடல் நலத்திற்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான். அவரை வணங்குவதும் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது மிக மிக முக்கியம். மேலும், மருத்துவத்தின் தெய்வீகமாக போற்றக்கூடிய தன்வந்திரி பகவானை வழிபாடு செய்வதும் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து பிரார்த்தனை செய்வதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
அதோடு குரு பகவானின் அருளை பெற தக்ஷிணாமூர்த்திக்கு நேராக குடும்ப படங்களை வைப்பது நல்லது. நீண்ட நாள் ஆரோக்கிய குறைபாடுகள் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு உணவு அல்லது தேவையான பொருட்களை தானம் வழங்குவதும் அவர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கக்கூடிய பரிகாரமாக அமையும் என்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |