இப்பிறவியில் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?
நாம் இறைவினிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே எல்லாம் எழுதப்பட்டது.
இந்த நேரத்தில் இந்த விஷயங்கள் விதி மாற்றங்கள் நடக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சிலருக்கு நடப்பவை முன் கூட்டியே காட்சியாக வருகிறது என்று சொல்வதுண்டு. அது எல்லாம் ஒரு தவம்
ஆனால், உண்மையில் ஏற்கனவே பிறப்பு எடுக்கும் முன் தீர்மானிக்க பட்டது தான் நம் நினைவுக்கு வரும்.
காட்சியாக வரும் நிகழ்வில் எத்தனை மாற்றங்கள் எடுக்க முடியும் என்று நினைத்தாலும் விதியை வெல்வது மிக கடினம்.
விதி மதியால் வெல்லலாம் என்பார்கள், அதாவது அந்த மதியால் வெல்ல முடியும் என்பதற்கு விதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
மேலும்,வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். கஷ்டம் கொடுக்காத எதையும் அனுபவிக்க முயற்சிகள் தேவை இல்லை. அதன் பெயர் தான் இன்பம்.
அந்த இன்பத்தை எந்த சலனமும் இல்லாமல் மனம் தானாக ஏற்றுக்கொள்ளும்.
ஆனால் துன்பம் இது தான் போராட்டம். அந்த போராட்டம் தாங்கி கொள்ள என்ன செய்யவேண்டும் கடவுளை சரண் அடையவேண்டும்.
பிரச்னைகள் வளராமல் இருக்கவும் எத்தனை பிறப்பு எடுத்தாலும் அந்த பிறப்பில் வரக்கூடிய துன்பத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியும் மனோதைரியத்தை கொடு என கேட்கவேண்டும்.
இது தான் நாம் முறையாக கடவுளிடம் வைக்க வேண்டிய பிராத்தனை. நடப்பவை எல்லாம் அவன் செயல் மனம் தெளிந்து அவனிடம் சரண் அடைந்தால் போதும், அவன் கை விடாமல் எந்நேரம் என்ன செயல் உதவி கிடைக்கவேண்டும் என்று தீர்மானித்து செயல்படுத்துவான். அவன் இன்றி அணுவும் அசையாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |