கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ செல்ல வேண்டிய கோயில்
வாழ்க்கையில் மிக முக்கிய நபர்கள் அப்பா- அம்மா. அவர்களின் உறவின் பெயர் தான் கணவன் மனைவி.
வாழ்க்கையில் இவர்களின் உறவு சிறப்பாக இருந்தால் தான் குடும்பம் குழந்தைகள் என அனைவரும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அப்படியாக நேரங்களில் அவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தீர்ந்துவிடும்.
இருப்பினும் சில வீடுகளில் அந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கும் அவர்கள் செல்ல வேண்டிய ஆலயம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் வடுகன்பற்று என்னுமிடத்தில் அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் வழிபட்ட சிவத்தலமான அகத்தீஸ்வரம் கோயில் உள்ளது.
இங்கு சென்று தரிசித்து வர தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு, பிரச்னைகள் விலகும்.
முன்னொரு காலத்தில் பார்வதி, சிவன் திருமணத்திற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயத்தில் ஒன்று கூடினர். இதனால் பூமியின் வடபகுதி உயர்ந்து தென்பகுதி தாழ்ந்தது.
இதை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் சிவன். அப்போது அவர் ''அடியேன் நினைக்கும் போதெல்லாம் மணக்கோலத்தில் எமக்கு காட்சி தர வேண்டும்'' என வரம் பெற்றார்.
வழியில் ஒவ்வொரு புனித தலமாக தரிசித்து தென்பகுதிக்கு வந்த அவர், ஓரிடத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே 'அகத்தீஸ்வரம்' என்னும் இத்தலமாகும்.
மேலும் ஒரு முறை குமரியில் கோயில் கொண்டு இருக்கும் பகவதி அம்மனை தரிசித்து விட்டு குதிரையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் மன்னர்.திடீர் என்று காட்டுப்பாதையில் ஓரிடத்தில் குதிரை நகர மறுத்தது.
அவருடன் வந்த அரண்மனை ஜோதிடர், ' இந்த இடத்தில் தான் தியானத்தில் ஆழ்ந்த அகத்தியர், திருமணக்கோலத்தில் சிவபெருமானை தரிசித்தார்'' என்ற புராணக்கதை கூறினார்.
இதையறிந்த மன்னர் அங்கு சிவன் கோயில் ஒன்றைக் கட்ட விரும்பி அகத்தீஸ்வரர் என சுவாமியும், அறம்வளர்த்த நாயகி என அம்மனும் பெயர் பெற்றனர்.
நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வைப்பு தலமாக இது உள்ளது. சோழர்கள், பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் எடுத்துக் கொடுத்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்கிறது ஒரு கல்வெட்டு.