இந்தியாவில் இந்த 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லையாம்

By Sakthi Raj Feb 20, 2026 09:30 AM GMT
Report

கோவில் வழிபாடு என்று வரும் பொழுது சில இடங்களில் பெண்கள் தான் கோவிலுக்குள் செல்ல தடை விதித்து இருப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் மறுபக்கம் முக்கியமான சில கோவில்களில் ஆண்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியாக இந்தியாவில் குறிப்பிட்ட 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்ல அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

இந்தியாவில் இந்த 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லையாம் | Mens Are Not Allowed To Enter This Temple In India

ஆற்றுக்கால் கோயில்- கேரளா:

கேரளா திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இது பெண்களுக்கான சபரிமலை கோவிலாக கருதப்படுகிறது. இங்கு ஆட்டுக்கல் பொங்கல் திருவிழாவில் பல லட்சம் பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் செய்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்கிறார்கள். இது உலகத்திலே அதிக அளவில் பெண்கள் கூடி நடத்தக்கூடிய முக்கிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. அதைவிட முக்கியமாக இங்கு நடக்கக்கூடிய சடங்கு பெண்மையின் ஆற்றலை ஒரு கூட்டு வழிபாடாக உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது. ஆதலால், இந்த கோவிலுக்கு ஆண்கள் செல்ல அனுமதி இல்லை.

இந்தியாவில் இந்த 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லையாம் | Mens Are Not Allowed To Enter This Temple In India

அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கும் அதிசய கிருஷ்ணன் கோயில்

அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கும் அதிசய கிருஷ்ணன் கோயில்

சந்தோஷி மாதா கோயில், ஜோத்பூர்:

சந்தோஷி மாதா கோவில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மந்தூருக்கு அருகே லால் சாகர் என்ற ஏரிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய மலையில் அமைந்திருக்கிறது. இங்கு பெண்கள் தான் பூஜை சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இந்த கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறும். சில முக்கியமான நேரங்களில் ஆண்கள் கருவறைக்குள் செல்ல இங்கு அனுமதி இல்லை.

இந்தியாவில் இந்த 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லையாம் | Mens Are Not Allowed To Enter This Temple In India

பிரம்மா கோயில், புஷ்கர், ராஜஸ்தான்:

புனித புஷ்கர் ஏரிக்கு அருகே அமைந்திருக்கிறது இந்தியாவின் புகழ்பெற்ற பிரம்மா கோயில். கார்த்திகை பூர்ணிமா பண்டிகையின் பொழுது திருமணமான ஆண்கள் கருவறைக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் இந்த 4 கோவில்களுக்குள் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லையாம் | Mens Are Not Allowed To Enter This Temple In India

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி உண்டா? ஏப்ரல் 7 ஆம் தேதி என்ன நடக்கும்?

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி உண்டா? ஏப்ரல் 7 ஆம் தேதி என்ன நடக்கும்?

சக்குளத்துகாவு கோவில், கேரளா:

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தாழ வாடி பஞ்சாயத்து நீராட்டு புரத்தில் திருவல்லாவுக்கு அருகில் இந்த கோவில் அமைந்திருக்கிறது இந்த கோவிலில். ஆண்டு தோறும் பெண்களை கொண்டாடும் வகையில் "நாரி பூஜை" திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த பூஜையில் ஆண்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US