2026-ல் நடக்கும் செவ்வாய் ராகு சேர்க்கை..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Dec 28, 2025 12:08 PM GMT
Report

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் தான் ஒவருடைய வீரம் கோபம் விவேகம் என்று எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறார். அதேபோல் ராகு பகவானை எடுத்துக் கொண்டோம் என்றால் அவர்தான் ஒரு மனிதருக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய திடீர் மாற்றங்கள் பிடிவாதம் மாயை போன்ற உலகை காட்டக்கூடிய அம்சமாக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இணையும் பொழுது சில ராசிக்காரர்களுக்கு தவிர்க்க முடியாத கோபம் ஆவேசம் வந்துவிடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு இந்த இரு கிரகமும் இணைய இருக்கும் நேரத்தில் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

2026-ல் நடக்கும் செவ்வாய் ராகு சேர்க்கை..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | Zodiac Must Carefull On 2026 Sevvai Ragu Transit

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அவர்களுக்கு தேவையில்லாத குழப்பங்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு நெருங்கியவர்கள் இவர்களிடம் ஏதேனும் ஒரு சிறிய விஷயத்தை கேட்டால் கூட அதற்கு இவர்கள் மிகவும் கோபத்துடன் பதில் அளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்த காலகட்டங்களில் நெருங்கிய நபர்களுடன் கூட இவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் ராகு சேர்க்கையானது இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மனநிலையில் கொடுக்கப் போகிறது. சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம் அல்லது சிறிய காயங்கள் ஏற்படலாம். சுற்று வட்டாரத்தில் எதிர்பாராத எதிரிகள் உருவாகலாம். அதேபோல் பொருளாதார ரீதியாகவும் இவர்கள் சில இழப்புகளை சந்திக்க கூடலாம் என்பதால் தியானம் மேற்கொண்டு இறைவழிபாடு செய்தால் இந்த பாதிப்பில் இருந்து விலகலாம்.

இந்த ஒன்று உங்களிடம் இருந்தால்.. எந்த கெட்ட நேரமும் உங்களை நெருங்காது

இந்த ஒன்று உங்களிடம் இருந்தால்.. எந்த கெட்ட நேரமும் உங்களை நெருங்காது

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கையானது இவர்களுக்கு தொழில் ரீதியாக அவர்கள் கூட்டாளியுடன் ஒரு கசப்பை உண்டு செய்ய போகிறது. தொழிலில் இவர்கள் இந்த காலகட்டம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் மற்றும் மருத்துவ செலவுகள் இவர்கள் எதிர்பாராத விதமாக சந்திக்கலாம். பொது இடங்களில் பேசும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வார்த்தைகளை இவர்கள் உபயோகிப்பது தவிர்க்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US