2025: அதிக சவால்களை சந்தித்த ராசிகள் யார்? நீங்களும் இருக்கிறார்களா?
எல்லா வருடமும் எல்லா ராசிகளுக்கும் சாதகமாக இருந்து விடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசிக்கும் பல்வேறு வகையான பாடங்களும் புதிய அனுபவங்களையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு சில ராசிகளுக்கு மிகுந்த கஷ்டங்களை கொடுத்து விட்டது.
அவர்கள் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டத்தை இனிமேல் அவர்கள் அனுபவிக்காத அளவிற்கு கடினமான காலங்களை வெற்றிகரமாக கடந்து 2026 ஆம் ஆண்டின் நோக்கி அவர்கள் பயணம் செய்ய காத்திருக்கிறார்கள். அப்படியாக 2025 ஆம் ஆண்டு எந்த ராசியினருக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினர் 2025 ஆம் ஆண்டு அவர்கள் நினைத்து பார்த்திடாத அளவு மிகப்பெரிய சோதனைகளை தொழில் ரீதியாகவும் சொந்த வாழ்க்கையிலும் சந்தித்திருப்பார்கள். இதற்கு காரணம் சனி பகவான்.
நிறைய பாடங்கள் இவர்கள் வாழ்க்கையில் கற்க தவறியதை இந்த வருடம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கற்றுக் கொடுத்திருப்பார். அந்த அனுபவங்களைக் கொண்டு இனி வரும் ஆண்டை இவர்கள் மிகச் சிறப்பாக கொண்டு சென்று வெற்றி பெற்றுவிடுவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு வேலை ரீதியாக நிறைய தொந்தரவுகள் மற்றும் சுமைகள் இருந்திருக்கும். அலுவலகத்தில் இவர்கள் வேலையைப் பற்றி நிறைய அவதூறுகளும் விமர்சனங்களையும் சந்தித்து இருப்பார்கள்.
அதை எல்லாம் தகர்த்து இனிவரும் ஆண்டை இவர்கள் மிகச் சிறப்பாக கொண்டு செல்ல காத்திருக்கிறார்கள். வேலை ரீதியாகவும் உறவு ரீதியாகவும் இவர்கள் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் இவர்களை விட்டு விலகப் போகிறது.
கும்பம்:
கும்ப ராசிக்கு இந்த 2025 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய கடினமான ஆண்டாகவே இருந்திருக்கக்கூடும். அதாவது எந்த வேலையை செய்தாலும் அதற்கு சரியான வருமானம் என்று இவர்கள் கைகளுக்கு வந்து இருக்காது.
எல்லா விஷயங்களிலும் காலதாமதத்தை சந்தித்து இருப்பார்கள். அதாவது எதையும் பொறுமையாக நிதானமாக யோசித்து செய்ய வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய பாடத்தை இவர்கள் 2025 ஆம் ஆண்டு கற்றுக்கொண்டு அதை வைத்து இனிவரும் ஆண்டை சிறப்பாக வாழ காத்திருக்கிறார்கள்.
மீனம்:
2025 ஆம் ஆண்டு மீன ராசியினருக்கு மனரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நிறைய இருந்திருக்கும். அதாவது மனரீதியான போராட்டமே இவர்களுக்கு பெரிய போராட்டமாக இருந்திருக்கும். 2025 ஆம் வருடத்தை இவர்கள் எவ்வாறு கடந்து வந்தார்கள் என்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.
இனிமேல் கவலை எல்லாம் விலகி சந்தோஷமாக வாழ போகிறார்கள். இவர்கள் மனரீதியாக சந்தித்து வந்த அழுத்தங்கள் எல்லாம் விலகி ஒரு நல்ல நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை இனிவரும் காலங்களில் வாழப் போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |