நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?
நண்பர்கள் என்றால் ஒருவித உற்சாகத்தை கொடுக்ககூடும். மேலும் விடுமுறை காலங்களில் நண்பர்களுடன் நாம் நம்முடைய நேரத்தை செலவிட விரும்புவோம். அதை விட முக்கியமாக மன அழுத்தமாக இருக்கும் காலங்களில் நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ளும் பொழுது நம்முடைய மன அழுத்தம் குறைவதை நாம் காணலாம்.
அப்படியாக குறிப்பிட்ட சிலர் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு பயணமும் நண்பர்களும் இருந்தால் போதும் வாழ்க்கையில் அனைத்தையும் மறந்து விடுவார்கள் அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசி பொருத்தவரை எப்பொழுதும் அவர்கள் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வார்கள். இவர்கள் நண்பர்களுடன் தன்னுடைய பொழுதுபோக்கை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பவர்கள். நண்பர்கள் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அழைத்து விட்டால் அவர்கள் எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் அதை விட்டுவிட்டு பயணத்தில் கலந்து கொள்வார்கள்.
கடகம்:
கடக ராசியினர் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசை கொள்பவர்கள். இவர்கள் நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மேலும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். நண்பர்களுடன் பழகுவது இவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பக் கூடியவர்கள். அதோடு நண்பர்களுடன் பயணம் செல்ல வேண்டும் என்றால் இவர்களுக்கு அதீத உற்சாகத்தை கொடுப்போம்.
மகரம்:
மகர ராசியினர் எப்பொழுதும் ஒருவிதமான மன அழுத்தத்தில் இருக்கக்கூடிய ஒரு நபராக தான் இருப்பார்கள். அதனால் மகர ராசியினர் தங்களுடைய மன அழுத்தத்தை எப்பொழுதும் நண்பர்களுடன் சேர்ந்து குறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு நண்பர்கள் இல்லை என்றால் வாழ்க்கையில் ஏதோ ஒரு பிடிப்பு இல்லாதது போல் உணரக்கூடியவர்கள். ஆதலால் பெரும்பாலும் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்வது மட்டுமே அவர்கள் ஆர்வமாகக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். நண்பர்கள் இல்லை என்றால் மகர ராசியினர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







