இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் சொகுசு வாழ்க்கை!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு பண்புகள் இருக்கும்.
ஒரு சில ராசிகளில் பிறந்தவர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்க்கையை நடத்துவார்கள், சிலருக்கு வாழ்வின் முக்கியமான காலகட்டங்களில் அதிர்ஷ்டம் தேடி வரும்.
அப்படி ஒரு சில ராசிகளின் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் ஆண்கள் வாழ்வில் செல்வம் சேருமாம், நிதி சிக்கல்கள் தீர்ந்து ராஜவாழ்க்கை வாழ்வார்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவார்கள். திருமணத்திற்கு பின்னர் தங்கள் கணவரின் வாழ்வில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் பெண்களால் மணவாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அநாவசிய செலவுகளை தவிர்த்து பணத்தை சேமிப்பதில் இவர்கள் கில்லாடிகளாம்.
கடகம்
அன்பான கடக ராசியில் பிறந்த பெண்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமின்றி தன்னை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்யக்கூடிய பக்குவம் இவர்களுக்கு உண்டு, குடும்பத்தையும் அனுசரித்து செல்லக்கூடியவர்கள். இவர்களை திருமணம் செய்த ஆண்களின் வாழ்வில் மனநிறைவு இருக்கும்.
சிம்மம்
சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களை எளிதில் கவரும் திறன் கொண்டவர்கள். கணவர் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களையும் வசியப்படுத்தும் சக்தி இவர்களுக்கு உண்டு. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் திறம்பட கையாளும் சக்தி இவர்களுக்கு உண்டு, அதேசமயம் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தையும் தேடித்தருவார்கள்.