2026-ல் குரு-சுக்கிரன் தரும் யோகம் - இவங்களுக்கெல்லாம் கல்யாணம் உறுதி

By Sumathi Dec 29, 2025 01:10 PM GMT
Report

ஜூன் 2026 ஆம் ஆண்டு குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலமும், சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கும் மாதங்களான ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதம் திருமண முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

2026-ல் குரு-சுக்கிரன் தரும் யோகம் - இவங்களுக்கெல்லாம் கல்யாணம் உறுதி | Zodiac Signs Most Likely To Marry In 2026

கடகம்

ஜூலை முதல் அக்டோபர் வரை நல்ல இடத்திலிருந்து திருமண வரன் தேடி வரும். மார்ச் மாதத்தில் சுக்கிரன் வலுப்பெறுவதால் காதல் திருமணம் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆடம்பரமான திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்

மே மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் தேடி வரும். சுக்கிர பகவானின் சஞ்சாரம் காரணமாக மனதிற்கு பிடித்தமானவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 விருச்சிகம்

காதல் உறவிலிருந்து தடைகள் நீங்கி, பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். குறிப்பாக மே மாதத்தில் பிரம்மாண்ட திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கன்னி

பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஓரிரு மாதங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த வாய்ப்பு தள்ளிச் சென்றால் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலமும் மிகவும் சாதகமாக இருக்கும். 

2026ல் கேது பெயர்ச்சி - தோல்வியும், அவமானத்தையும் சந்திக்கும் 3 ராசிகள்

2026ல் கேது பெயர்ச்சி - தோல்வியும், அவமானத்தையும் சந்திக்கும் 3 ராசிகள்

மீனம்

தகுதியான மற்றும் வசதியான வாழ்க்கைத் துணை அமையும் யோகம் உருவாகும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாழ்க்கை துணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு பொருத்தமான, உங்கள் உணர்வை புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணை உங்களுக்கு கிடைப்பார்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US