தலையே போனாலும் தப்பை ஒத்துக்காத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே தவறு செய்வது இயல்பான விடயம் தான். ஆனால் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் உணர்ந்து தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.இதுவே அறிவுள்ள மனிதர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் தவறுகளை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவோ,அதற்காக மன்னிப்பு கேட்கவோ மாட்டார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே பிடிவாத குணத்துக்கும் அகங்கார உணர்வுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்களிடம் இருக்கும் தற்பெருமை இவர்களின் தவறுகளை ஒருபோதும் ஒத்துக்கொள்ள இடமளிக்காது.
ரிஷபம் - ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்த போதிலும் அதனை மற்றவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் ஒத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.
சிம்மம் - சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், கம்பீரமும், தற்பெருமையும் இவர்களிடம் இயற்கையிலேயே அமைந்திருக்கும்.
இவர்கள் எந்த இடத்திலும் தலைமை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.இவர்களின் தேவைற்ற அகங்காரம் இவர்களை யாரிடம் மன்னிப்பு கேட்க இடமளிக்காது. அதனால் பெரும்பாலும் தங்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் இந்த குணத்தால் மன்னிப்பு கேட்பதற்கு அவர்கள் மிகவும் தயங்குவார்கள், ஏனெனில் அது அவர்களை பலவீனமாக மாற்றிவிடும் என்ற எண்ணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மகரம் - மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிக தற்பெருமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்த தவறை உணர்ந்த பின்னரும் கூட அதை யாரிடமும் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாங்கள் செய்யும் அனைத்தும் சரியானது என்ற மனநிலை இவர்களுக்கு தீவிரமாக இருக்கும்.