இந்த 4 ராசிக்காரர்களுக்கு சரியான நேரமே இல்லை-பிறவி சோம்பேறிகள் இவர்கள் தானாம்
பொதுவாக எல்லோருக்கும் நேரம் என்பது முக்கியமாகும். நேரம் தவறாமல் இருப்பது மிகவும் அவசியம்.
ஆனால் சில நபர்கள் அனைத்து விஷயங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் ஏன் வேலைக்கேக் கூட தாமதமாக செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இது அவர்களை அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். இதை ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு தான் இந்த குணம் இருக்கும் என கூறப்படுகின்றது.
அவர்களின் அலட்சியம் மற்றும் கவலையற்ற தன்மை முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இந்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் சரியான நேரத்திற்கு வர மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
தனுசு | தனுசு ராசிக்காரர்கள் குருபகவானால் ஆளப்படும் ராசிக்காரர்கள். இவர்கள் சாகசத்திற்கும் தன்னிச்சையான மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் ஏதாவது புதிய விடயங்கள் ஆராய்வதையும், உற்சாகமான அனுபவங்களைத் தேடுவதையும் விரும்புகிறார்கள். இந்த காரணத்தினால் இவர்கள் வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இவர்களிடம் சுதந்திரமான மனநிலை உள்ளது. இப்படியே நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறார்கள், இதனால் தான் அவர்கள் எதிலும் சரியான நேரத்தை பின்பற்ற முடியாத காரணம். இவாகளிடம் இருக்கும் அலட்சியம் இவர்களை நேரம் இருப்பதாக அவர்களை நம்ப வைக்கிறது. இதன் விளைவாக இவர்கள் எல்லாவற்றிலும் தாமதம் காட்டுகிறார்கள். |
மீனம் | மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களிலும், கற்பனை உலகிலும் மூழ்கிப் போகிறார்கள். அவர்கள் நேரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மாறாக அவர்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீன ராசிக்காரர்கள் பச்சாதாபம் கொண்டவர்களாகவும். இவர்கள் உணர்திறன் கொண்ட நபர்கள் என்பதால் இவர்களின் சொந்த வேலையை மறந்து செயல்பட நேரிடும். இவர்கள் நேரத்தை கடைப்பிடிக்காமல் தங்கள் போக்கிலே செயல்படுவார்கள். இவாகள் பெரும்பாலும் தாமதமாக வருவதற்கு காரணம், அவர்கள் தங்கள் சொந்த உலகில் வாழ்கிறார்கள். அங்கு நேரத்திற்கு முக்கியத்துவம் என்பதே இல்லை. |
கடகம் | சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது நல்லது என்றாலும் சில விடயங்களில் இது இவாகளை கட்டிப்போடும். கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் விரைவாக முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுகிறார்கள், அது எவ்வளவு எளிதான விஷயமாக இருந்தாலும் சரி, எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த முடிவையும் விரைவில் எடுக்க மாட்டார்கள். இந்த குணம் தான் இவர்களின் வாழ்க்கையின் தாமதத்திற்கு காரணம். இவர்களள் அதிகமாக மற்றவர்களுடன் பேசி கதைத்து சிரித்து இருக்க நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். இது மற்றைய வேலைகளை தாமதப்படுத்தும். அனைவரையும் மகிழ்விக்கவும் மோதலைத் தவிர்க்கவும் அவர்கள் விரும்புவது அதிகப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நிகழ்வுகளுக்கு தாமதமாக செல்வதற்கு வழிவகுக்கும். |
கும்பம் | கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் வழக்கத்திற்கு மாறான மற்றும் சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் படி செயல்படுகிறார்கள். இவர்கள் நேரத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட சமூக விதிமுறைகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். இதனால் தங்கள் புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்களில் மூழ்கிவிடுகிறார்கள். இதன் காரணமாக மற்றைய விடயங்கள் தாமதமாகும். |