2026 காதலர் தினம்: மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய ராசிகள்

By Sakthi Raj Feb 13, 2026 01:00 PM GMT
Report

கிரகங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கிரகங்களுடைய முக்கியமான மாற்றம் நடக்கிறது. அதனால் 2026 ஆம் ஆண்டு காதலில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 இவர்களுக்கு இந்த வருடம் தேவையில்லாத மனக்கசப்புகள், வீண் வாக்குவாதம். அதிக கோபத்தினால் மனம் முறிவு போன்றவை ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 காதலர் தினம்: மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய ராசிகள் | Zodiac Who Must Be Carefull In Love Life On 2026

நாளை சனி பிரதோஷ விரதம்.. சனியின் தாக்கம் குறைய இதை செய்ய மறக்காதீர்கள்

நாளை சனி பிரதோஷ விரதம்.. சனியின் தாக்கம் குறைய இதை செய்ய மறக்காதீர்கள்

கடகம்:

கடக ராசியினர் இந்த ஆண்டு குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் இவர்களுக்கு உணர்வு ரீதியாக நிறைய குழப்பங்களை சந்திக்க போகிறார்கள். ஒரு நிலையான தன்மை இல்லாமல் இருப்பதால் காதலில் இவர்கள் விட்டுக்கொடுத்து போவதனால் மட்டுமே அவர்களுடைய காதல் வெற்றி ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கன்னி:

நீங்கள் ஏற்கனவே காதலில் இருக்கிறீர்கள் அல்லது ஒரு நபரிடம் இப்பொழுதுதான் உங்களுடைய காதலை வெளிப்படுத்த போகிறீர்கள் என்றால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சரியான முடிவு எடுத்து செயல்படக்கூடிய காலம். நீங்கள் தவறாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சில நேரம் உங்களுடைய அதீத அன்பு கூட உங்களுடைய மனம் முறிவிற்கு காரணமாக ஆகிவிடும்.

2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள்

2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள்

மீனம்:

மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் மனதில் நிறைய குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஆதலால் இவர்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தேவையில்லாத நட்புகளிடம் இருந்து நீங்கள் தூரமாக இருப்பது நல்லது மூன்றாம் நபருடைய பேச்சை நீங்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் தொடர்பு படுத்தாமல் இருந்தால் மட்டுமே உங்களுடைய உறவு சிறப்பானதாக அமையும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US