புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா?
புரட்டாசி மாதம் பிறந்து கோயில்களில் வழிபாடு எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நாம் அனைவரும் அறிந்தது.அப்படியாக இந்த புரட்டாசி மாதத்தில் நாம் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதால் எண்ணற்ற நன்மைகள்.அதை பற்றி பார்ப்போம்.
1.சிலருக்கு ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் விலகுவதோடு பாவங்கள் நீங்கி புண்ணியமும் நன்மையையும் தேடி வரும்.
2.திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
3.புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது சிறப்பை தரும்.
4.புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.
5.புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
6.புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
7.புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.
8.ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடைபெறும்.
9.புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.
10.புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |