மார்கழி மாதம் பற்றி தெரிந்தால் நிச்சயம் இதை செய்ய மாட்டீங்க- என்ன தெரியுமா?
தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்மீக ரீதியாக நிறைய சிறப்புகள் கொண்டது. அதிலும் குறிப்பாக மரக்கிழி மாதம் என்று வந்துவிட்டாலே வழிபாட்டிற்குரிய ஒரு மிகச்சிறந்த மாதமாக இருக்கிறது. பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று அவர் சொல்கிறார்.
ஆக மார்கழி மாதம் எவ்வளவு விசேஷம் என்று நாம் இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு சிறப்புகளை கொண்ட மார்கழி மாதத்தில் இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய சிறப்புகள் இருக்கிறது.
அதை தெரிந்து கொண்டால் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாட்டை தவறாமல் செய்துவிடுவோம். அதை பற்றி பார்ப்போம்.

1. மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள் . சைவர்கள் இந்த மாதத்தை தேவர் மாதம் என்றும் குறிப்பிடுவார்கள்.
2. மிக முக்கியமாக பிரபஞ்சத்தில் மார்கழி மாதத்தில் தான் ஆக்ஸிஜன் அதிக அளவில் உற்பத்தி ஆகுவதாக சொல்கிறார்கள். ஆதலால் மார்கழி மாதத்தில் ஓசோன் படலத்திலிருந்து வரும் சுத்தமான காற்றை போல் வேறு எந்த மாதத்தில் நமக்கு கிடைப்பதில்லை. அதனால் தான் அதிகாலையிலே இந்த மாதத்தில் எழுந்து கோலம் போடுமாறு முன்னோர்கள் நமக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள்.
3. எல்லா மாதங்களிலும் செய்யக்கூடிய தர்ம காரியங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்த்து கொடுத்தாலும் மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய தானமும் தர்மமும் நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை சேர்த்து கொடுக்கிறது.
நம்முடைய பாவங்கள் நீங்கி வழிபாடு செய்வதற்கு நிச்சயம் மார்கழி மாதத்தில் நிறைய தானங்கள் செய்யலாம். அதிலும் குளிர் காலம் என்பதால் ஏழை மக்களுக்கு கம்பளி போன்றவற்றை தானம் கொடுப்பது ஒரு நல்ல பலன் கொடுக்கும்.
4. மார்கழி மாதம் காலையிலே எழுந்து ஒரு நாள் இறைவனை வழிபாடு செய்தால் ஒரு வருடம் நம் இறைவழிபாடு செய்த அனைத்து பலன்களையும் நாம் பெறலாம். எனவே தான் மார்கழி மாதம் முழுவதுமே நாம் அதிகாலை தவறாமல் எழுந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்திருக்கிறார்கள்.
5. ஒருமுறை இந்திரனால் பெரு மழை வெள்ளத்தால் கோகுலத்தில் அனைவரும் கஷ்டப்பட்டார்கள். அவர்களை காக்க கிருஷ்ண பகவான் கோவர்த்தனகிரி மலையை குடையாக பிடித்து பக்தர்களே காப்பாற்றியது இந்த மார்கழியில் தான்.

6. மார்கழி மாதமானது ஒருவர் மரணத்தையும் வெல்லக்கூடிய மாதம் என்று மார்க்கண்டேய புராணம் நமக்கு சொல்கிறது.
7. அதோடு மார்கழி மாதத்தில் தான் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய அவர்களின் குருபூஜை நடைபெறுகிறது.
8. எல்லா மாதங்களில் வரக்கூடிய ஏகாதசியும் மிகவும் சக்தி வாய்ந்தது என்றாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி என்பது பெருமாள் விரதங்களில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான ஏகாதசியாக இருக்கிறது. மேலும், எவர் ஒருவர் பெருமாளை நினைத்து இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9. குறிப்பாக அந்த மாயக் கண்ணனை மணமுடித்துக் கொள்ள பெரியாழ்வாருக்கு மகளாக பிறந்த ஆண்டாள் திருமகள் மார்கழி மாதம் "மார்கழி திங்கள் அல்லவா" என ஆரம்பித்து 30 பாசுரங்களை தினமும் ஒன்றாக பாடி பெருமாளை மனம் முடித்துக் கொண்ட ஒரு சிறப்பு இந்த மார்கழி மாதத்திற்கு உண்டு.
10. மேலும், மார்கழி மாதத்தில் தான் சிவபெருமானுக்குரிய ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. சிவபெருமானுக்குரிய பூஜைகளில் மிகவும் முக்கியமான பூஜை இந்த ஆருத்ரா தரிசனமாகும்.
ஆக மார்கழி மாதம் ஒவ்வொரு நாளை எடுத்துக் கொண்டாலும் அவை ஒவ்வொரு ஆன்மீக சிறப்புகளை கொண்டிருக்கும். அதனால் இந்த மாதங்களில் இறை வழிபாடு மட்டுமே செய்ய வேண்டும் என்பதற்காகவே பிற சுப நிகழ்ச்சிகளை நாம் செய்வதில்லை.
அதனால் இந்த மார்கழி மாதத்தில் நீங்கள் இறைவனோடு இணைந்து இந்த வாழ்க்கையை அற்புதமாக மாற்ற நிச்சயம் இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள் உங்களுக்கான பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |