இந்த ராசியில் பிறந்த நபர் வீடுகளில் இருந்தால் கோடீஸ்வர யோகம் நிச்சயமாம்
சில குடும்பங்களில் நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் அவர்களுடைய பொருளாதார கஷ்டம் என்பது ஒரு விடிவு காலத்தை எட்டி இருக்கும். இதற்கு காரணம் அந்த குழந்தை பிறந்த ராசி நட்சத்திர அமைப்பு தான்.
அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சில ராசியில் பிறந்தவர்களால் அவர்களுடைய குடும்பத்தில் பொருளாதாரம், ஆரோக்கியம், செல்வ வளம் என்று எல்லாம் நிறைந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருமாம். அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்களால் தனது குடும்பத்தினருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் கட்டாயமாக ஒரு நல்ல பொருளாதாரம் இருக்கும். இவர்களுடைய உழைப்பால் இவர்களுடைய குடும்பத்தை முன்னேற்றி செல்லக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். அதே சமயம் கடக ராசியில் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அந்த குழந்தை பிறந்ததற்கு பிறகு கட்டாயம் ஒரு நல்ல வளர்ச்சியை அந்த குடும்பம் சந்தித்திருக்கும்.
ரிஷபம்:
சுக்கிர பகவானின் ஆதிக்கத்தைக் பெற்ற ரிஷப ராசியினர் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியவர்கள் என்றே சொல்லலாம். ஒருவருக்கு ரிஷப ராசியில் நண்பர்கள் கிடைத்தாலே அந்த நண்பர் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தை தொடுவார்கள். அந்த அளவிற்கு ரிஷப ராசியினர் ஒரு அதிர்ஷ்டம் அடைந்தவர்கள். அப்படியாக ரிஷப ராசியினர் பிறந்ததற்கு பிறகு அல்லது ரிஷப ராசியினர் வளர்ந்த பிறகு அந்த குடும்பத்தினர் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் என்று சொல்கிறார்கள்.
மகரம்:
சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினர் உழைப்பதற்கு என்றே பிறந்தவர்கள். படிப்பிலும் சரி வேலையிலும் சரி மகர ராசியில் பிறந்தவர்கள் மிகச்சரியாக செய்யக் கூடியவர்கள். மேலும் மகர ராசியில் இருக்கக்கூடிய இடத்தில் எல்லோரும் தங்கள் வாழ்க்கையை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ண அதிர்வலைகளையும் பெறுவார்கள். அப்படியாக மகர ராசி கொண்டுள்ள குடும்பங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு செல்வந்தர்களாக வாழக்கூடிய நிலையை சனி பகவான் கொடுத்துவிடுகிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |