மார்கழி 1: இந்த முறையில் வழிபாடு செய்தால் குறைவில்லா செல்வம் கிடைக்குமாம்
மார்கழி மாதம் இறை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் கோதை நாச்சியார் பாவை நோன்பு இருந்து பகவான் கண்ணனை மணமுடித்துக் கொண்டாள். மேலும், பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் நான் மாதங்களில் மார்கழி என்று குறிப்பிடுகிறார்.
இவ்வளவு சிறப்பு நிறைந்த மாதமான மார்கழியில் எங்கும் நாம் இறை சக்தி நிறைந்திருப்பதை உணரலாம். நாம் கட்டாயம் இந்த மார்கழி மாதத்தில் மட்டுமாவது பக்தர்கள் அதிகாலை நேரத்தில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி இறை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை வளமாகும்.
மார்கழி ஒன்று நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? என்பதை பற்றி பார்ப்போம். மார்கழி மாதம் என்றாலே ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையும் மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை பாராயணம் செய்வதும் நமக்கு வாழ்க்கையில் நிறைய பலன்களைப் பெற்றுக் கொடுக்கும்.
அப்படியாக மார்கழி முதல் நாள் பாட வேண்டிய திருப்பாவையும் திருவெம்பாவை பற்றியும் பார்ப்போம்.

திருப்பாவை- பாடல் 1:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மார்கழி ஒன்று அன்று கண்ணனை மணமுடிக்க பாவை நோன்பு இருக்கின்ற நாச்சியார் இந்த பாசுரத்தை வைகுண்டத்தை மனதில் நினைத்துக் கொண்டு பாடுகிறார். அதனால் தான் "நாராயணனே நமக்கு பறை தருவான்" என்கிறார். மேலும் 108 திருப்பதிகளில் 106 பூமியில் நாம் பார்க்கலாம்.
108 ஆவது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசித்து வருகிறார். நாம் பூமியில் செய்யக்கூடிய தர்ம காரியங்களை பொறுத்துதான் இந்த திருப்பதியை நாம் அடைய முடியும். ஆக மார்கழி மாதம் ஒன்றாம் நாளில் இந்த பாசுரத்தை மனதில் மிகுந்த பக்தியோடு பாடி வர நிச்சயம் அவர்களுக்கான ஒரு ஒளி வாழ்க்கையில் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் பூமியில் வாழ்கின்ற காலங்களில் எவர் ஒருவர் தர்ம காரியங்கள் செய்து பெருமாளை மனதில் நினைத்து வாழ்ந்து வருகிறார்களோ அவர்களும் நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கக்கூடிய நாராயணனை சென்றடைந்து விடலாம்.

திருவெம்பாவை- பாடல் 1:
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்
மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடிய திருவெம்பாவை பாடலை திருப்பள்ளி எழுச்சி உடன் சேர்ந்து பாட வேண்டும் என்பதே மரபு ஆகும். பக்தர்கள் இந்த உலகத்தை உணர்ந்து, மெய்மறந்து பக்தி கண்ணீரில் கரைய வைக்க எம்பெருமான் ஈசன் அருளால் மட்டுமே முடியும்.
அதோடு சிவன் அருள் பெற்று அவனை உணர்ந்து ஒரு பக்தன் கண்களில் கண்ணீர் வடிந்து விட்டது என்றால் அவனின் கர்ம வினைகள் யாவும் விலகி அவருடைய ஆன்மாவானது தூய்மையை நோக்கி சென்று விடும்.
அப்படியாக இந்த பாடலை நாம் மார்கழி மாதத்தில் முதல் நாள் மிகுந்த சிவபக்தியோடு பாடிவர நிச்சயம் சிவபெருமான் நமக்குள் புகுந்து நம்மை ஆட்கொண்டு நாம் கேட்ட வரத்தையும் கேட்காத அற்புதத்தையும் கொடுத்து அருள்வார்.
ஆக மார்கழி மாதம் தவறாமல் எந்த ஒரு கேள்விகளும் இல்லாமல் திருப்பாவையும் திருவெம்பாவையும் படித்து வர ஆண்டாளின் அருளாலும் சிவபெருமானின் அருளாடும் நிச்சயம் மார்கழி மாதம் முடிவதற்குள் நீங்கள் கேட்டு வரம்உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக கடன் தொல்லைகள் இருந்தால் இதை பக்தியோடு உங்கள் மனதில் வைத்து பாராயணம் செய்து வர நிச்சயம் அதற்கான விடிவு காலம் பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |