வீட்டில் பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான ஆன்மீக தகவல்கள்
ஆன்மீகம் என்று எடுத்துக்கொண்டால் நம்முடைய முன்னோர்கள் பல பின்னணி காரணங்கள் கொண்டு அதை உருவாக்கி இருப்பார்கள்.அதை செய்வதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.அப்படியாக நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான ஆன்மீக தகவல்கள் பற்றி பார்ப்போம்.
1. இந்துக்கள் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு விஷேச நிகழ்வு என்றாலும் இந்த மாவிலை தோரணம் இல்லாமல் கண்டிப்பாக நடைபெறாது.அப்படியாக இந்த மாவிலை கட்டுவதற்கு பின்னால் ஒளிந்து இருக்கும் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களை தெரிந்து கொள்ளுவோம்.
வீட்டில் விஷேசம் என்றால் உற்றார் உறவினர்கள் அனைவரையும் நாம் அழைப்போம்.அப்படியாக அவர்களுக்கு ஏதுனும் நோய் கிருமிகள் இருக்கலாம்.அவர்களிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவாமல் இருக்கவும் நாம் இந்த மாவிலை தோரணையை வீட்டு வாசலில் காட்டுகின்றோம்.அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.
2. மேலும் நம்மில் பலர் ஏகாதசி விரதம் இருப்பது வழக்கம்.அப்படியாக ஏகாதசி விரதம் இருந்து விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும். பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
சிலருக்கு வயிற்று புண் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.அவர்களுக்காகவும் ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள்.
மேலும்,இந்த அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம்.காலையில் இருந்து சாப்பிடாமல் விரதம் இருப்பதால் களைப்பு ஏற்பட்டு உடல் பலவீனம் ஆக வாய்ப்புள்ளது.உடலுக்கு ஊட்டசத்தாகவும் சேர விரதம் முடிக்கையில் அகத்தி கீரை சாப்பிடுகின்றோம்.
3. ஆதி காலங்களில் வெள்ளி, செவ்வாய் வீட்டில் மறக்காமல் சாம்பிராணி தூபம் போடுவோம்.ஆனால் காலப்போக்கில் குறைந்து வருகிறது.
இதற்கு பின்னால் ஒரு அற்புத விஷேசம் நிறைந்து இருக்கிறது. பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
4. மேலும் நாம் வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.
அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
5. மேலும் பெரியவர்கள் இரவு நாம் தூங்கும் பொழுது வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம். நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு தெற்காகத்தான் இயங்குகிறது.
எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.ஆதலால் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று சாஸ்திர ரீதியாக கொண்டு வந்தார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |