கோயிலுக்கு செல்லும் பொழுது தவறியும் செய்யக்கூடாத 10 தவறுகள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக ஆலய வழிபாடுகளில் நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்ப்போம்.
1.கோவிலில் இருக்கக்கூடிய கொடிமரம் நந்தி வழிபடும் ஆகியவற்றின் நிழல்களை தவறியும் மிதித்து விடக்கூடாது.
2. தீபம் எரியாத நேரத்தில் நான் தீபத்தை தொட்டு வணங்க கூடாது.
3. சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்ற பொழுது மூலஸ்தானம் திரையிட்டு இருந்தால் அப்பொழுது நாம் கோவிலை சுற்றி வரக்கூடாது.
4. கோவிலில் மனிதர்களின் கால்களில் விழுந்து வணங்க கூடாது.
5. கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பியவுடன் கால்களை கழுவ கூடாது.

6. சிவன் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக அமர்ந்து வர வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் அமரக்கூடாது.
7. அதேபோல் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் நிச்சயமாக தலைக்கு குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
8. கோயிலில் தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
9. கோவிலில் பிரகாரத்தை வலம் வந்த பிறகு கொடி மரத்தின் முன்பு மட்டும் தான் விழுந்து வணங்க வேண்டும்.
10. கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் அவசரமாக சுவாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். நிதானமாகவும் அமைதியாகவும் வழிபாடு செய்ய வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |