இந்த 10 தத்துவங்கள் உங்களுக்கு தெரிந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது

By Sakthi Raj Apr 22, 2026 01:00 PM GMT
Report

வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் இதுதான் என்று தீர்மானித்து வாழ்ந்து விடலாம். ஆனால், இந்த பிரபஞ்சம் அதற்கென்று ஒரு நியதி வைத்திருக்கிறது. அதன் படி வாழும் பொழுது தான் ஒருவர் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

இருப்பினும், மனிதர்களுடைய மனமானது அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் ஒரு மனிதன் இந்த உலகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லவும் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சக்தி வாய்ந்த பத்து தத்துவங்களை பற்றி பார்ப்போம்.

இந்த 10 தத்துவங்கள் உங்களுக்கு தெரிந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது | 10 Success Life Philosophy Everyone Must Know

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

1. சில நேரங்களில் இழப்புகள் பெரிய வலியை கொடுத்தாலும் அவை உண்மையில் நமக்கு ஆதாயமாக கூட இருக்கலாம். அதனால் எதையும் பெரிதுபடுத்தி அதனை நினைத்து வருந்துவதில் எந்த பயனும் இல்லை.

2. உண்மையில் வாழ்க்கையில் யாரிடம் நம் ஒரு விஷயத்தை கற்றுத் தெரிந்து கொள்கின்றோமோ அவர்களே ஆசிரியராக இருக்கிறார்கள். வெறுமனே பாடங்களை கற்றுக் கொடுப்பவர் எல்லோரும் ஆசிரியர்கள் ஆக மாறி விடுவதில்லை.

3. ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆரோக்கிய குறைபாடுகளை தாண்டிலும் அவன் மனதில் ஏற்படுகின்ற பயமே அவனை பாதி நேரங்களில் கொன்று தீர்த்து விடுகிறது. ஆதலால், பயத்தை விடுத்து தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எதையும் வென்று விடலாம்.

4. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களையும் குறைவான அனுபவங்களையும் வைத்துக்கொண்டு பல நேரங்களில் சரியாக முடிவெடுக்கக் கூடிய ஒரு அற்புதமான கலையாகும்.

5. ஒரு விஷயத்தை சிந்திப்பதற்கு முன்பாக ஆயிரம் முறை யோசிக்கலாம், ஆயிரம் முறை ஆலோசனை பெறலாம். ஆனால், ஒரே ஒரு முடிவை மிகச் சரியாக எடுத்து அதனை சரியாக மாற்ற வேண்டும்.

2026 குரு பெயர்ச்சி? ஹம்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் ராசிகள்

2026 குரு பெயர்ச்சி? ஹம்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் ராசிகள்

6. இந்த உலகத்தில் பல நேரங்களில் உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்பாகவே பொய் பாதி உலகத்தை வலம் வந்து விடுகிறது. அதற்கு நாம் அஞ்சுவதில் அர்த்தமில்லை. காலம் கடந்தாவது உண்மை அதனுடைய சத்தத்தை வெளிப்படுத்தும்.

7. நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான தத்துவத்தின் ஒன்றாக நாம் வாழ்வதும் பிறரை வாழ விடுவதுமாக இருக்க வேண்டும்.

8. வெற்றி பெற்ற பிறகும் அவனை அடக்கிக் கொண்டு எவன் ஒருவன் செயல்படுகின்றானோ அவன் வாழ்க்கையில் இரண்டாவது முறையும் வெற்றியை அடைகிறான்.

9. இந்த உலகத்தில் ஒரு விஷயத்தை நாம் முழுமையாக நம்ப வேண்டும் என்றால் அந்த விஷயத்தை முதலில் சந்தேகத்துடன் அணுக வேண்டிய நிலை உள்ளது.

10. இந்த உலகத்தை ஆட்டிப்படைக்க கூடிய முக்கியமான சக்தி ஒரு துளிப் பேனா மைக்கு இருக்கிறது. ஒரு துளி பேனா 10 லட்சம் நபரையும் சிந்திக்கத் தூண்டும் வருங்காலத்தையும் அவை உருவாக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US