சகல தோஷங்களையும் போக்கும் 'அண்ணன் பெருமாள்' திருத்தலம்

By Sakthi Raj Jun 17, 2024 05:00 AM GMT
Report

தெரிந்தோ தெரியாமலோ செய்த செயலை காலம் கடந்து உணரும் முன் அது மிக பெரிய பாவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.

அப்படியாக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கும் , ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷத்திற்கும் நிவர்த்தியாக நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெள்ளக்குளம் "அண்ணன் பெருமாள் கோயில்"

சகல தோஷங்களையும் போக்கும்

இந்த தலத்திலுள்ள சிறப்பு என்னவென்றால் இங்குள்ள சுவேத புஷ்கரணியில் நீராடினால் செய்த பாவம் எல்லாம் விலகி விடுகிறது.

மேலும் ஜாதக ரீதியாக எந்த ஒரு தோஷம் இருந்தாலும் இங்கு வந்து நீராட அது விலகுகிறது என்பது ஐதீகம்.

'அண்ணன் பெருமாள் கோயில்’ சீர்காழியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில்அமைந்துள்ளது. இத்திருத்தலில் பலவேறு புராண அதிசயங்கள் நடந்திருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

இங்கு மூலவர் ஸ்ரீ அண்ணன் பெருமாள் நின்ற திருக்கோலம், உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார் பூவாரி திருமகள். உற்சவர் பத்மாவதி,தீர்த்தம் சுவேத புஷ்கரணி. விமானம் தத்வதோதக விமானம்.மேலும் ருத்ரருக்கும் ஸ்வேதராஜனுக்கும் திருமால் காட்சிதந்த புண்ணியஸ்தலம்.

வீட்டில் செல்வ வளம் பெருக சில முக்கிய ஜோதிட குறிப்புக்கள்

வீட்டில் செல்வ வளம் பெருக சில முக்கிய ஜோதிட குறிப்புக்கள்


தல வரலாறு

சூர்ய குமாரனது மகன் துந்துகுமாரன் என்னும் அரசகுமாரன் தன்னுடைய ஒன்பதாவது வயதில் மரணம் ஏற்படும் என்பதை முன்னதாக அறிந்து ,அதை தடுக்க மறுத்த முனிவரிடம் சென்று உபதேசம் பெற்றான்.

பின்னர் நேராக திருமால் குடி கொண்டிருக்கும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு வந்து இங்குள்ள புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கித் தவம் இருந்தான்.

தவத்திற்கு மகிழ்ந்த பெருமான் துந்து குமாரனுக்கு நீண்ட ஆயுளைப் பெற்றுத் தந்தார். மார்க்கண்டேயனைப் போல் சாகாவரம் தந்தார். அத்தகைய பெருமை பெற்ற தலம் இது .

சகல தோஷங்களையும் போக்கும்  

இன்னொரு சமயம் தேவலோக நங்கைகளில் ஒருத்தியான குமுதவல்லி இந்த தலத்து புஷ்கரணியிலுள்ள குமுத மலர்களைப் பறித்துச் செல்ல வந்தபோது திருமங்கை மன்னனிடம் காதல் கொண்டாள்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்க திருமங்கை மன்னனும் அவ்வாறே நிறைவேற்றி கடைசியில் அரசபதவியைத் துறந்து குமுதவல்லியை மணந்து ஆழ்வாராக மாறினார்.

திருமங்கையாழ்வார், குமுதவல்லியை மணம் செய்து கொண்ட தலம். தாயார் சன்னதியில் குமுதவல்லிக்கும் ஒரு தனி சன்னதி உண்டு. வடவேங்கட ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்பதால்.

திருப்பதிக்கு வேண்டிக் கொண்டதை அங்கு செலுத்த முடியாதவர்கள் இங்கு செலுத்தலாம்.

மேலும் திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற புண்ணிய தலம் என்ற பல்வேறு சிறப்புக்கள் கொண்ட இப்பெருமாளை தரிசித்து வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெறுவோமாக.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US