இன்றைய ராசி பலன்(21.09.2024)
மேஷம்
இன்று திடீர் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.நேற்றைய நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை .நிறைவேற்றுவீர்.
ரிஷபம்
வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும்.மகிழ்ச்சியான நாள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.வியாபாரத்தில் வரவேண்டிய பணம் வரும்.
மிதுனம்
எல்லா பக்கமும் எதிர்ப்புகள் தோன்றும் நாள். புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கடகம்
அலுவலகத்தில் வேலை பளு கூடும்.வீண் அலைச்சல் உண்டாகும்.வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சிம்மம்
உங்களுக்கு எதிராக சிலரின் செயல் இருக்கும். கவனமாக இருப்பது அவசியம். எதிர்பார்த்த பணம் வரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்.
கன்னி
எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும்.நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.
துலாம்
கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம்.வருமானம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
விருச்சிகம்
நீண்ட நாள் போட்டியாளர் விலகிச் செல்வர்.நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நீண்ட நாள் பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.
தனுசு
கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்.விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
மகரம்
செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.
கும்பம்
எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும்.முன்னேற்றமான நாள். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம்வரும்.
மீனம்
உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடிகள் உண்டாகும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |