இன்றைய ராசி பலன்(14-03-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வை சந்திக்க போகிறீர்கள். நண்பர்கள் உதவியால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம்:

இன்று சிறு சிறு உடல் உபாதைகளை சந்திக்கலாம். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் ஏதேனும் பெரிய பிரச்சனைகள் சந்திக்க கூடும். அமைதி காப்பது நன்மை அளிக்கும்.

மிதுனம்:

வேலையில் உயர் அதிகாரிகளின் துணையால் அடுத்த கட்டம் செல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மதியம் மேல் மனதில் இனம் புரியாத கவலை உருவாகும்.

கடகம்:

பழைய நட்புகள் உங்களை மீண்டும் தேடி வருவார்கள். உங்கள் சுற்றி இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சிம்மம்:

உடல் அசதி உருவாகும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். புதிய நட்புகள் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். நன்மையான நாள்.

கன்னி:

தாய் வழி உறவால் சில சண்டைகள் உருவாகலாம். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். திருமண வாழ்க்கையில் உண்டான கசப்புகள் முற்றிலுமாக விலகும்.

மகாபாரதம்: பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் காந்தாரி

மகாபாரதம்: பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் காந்தாரி

துலாம்:

தூக்கமின்மையால் சிலர் அவதி படலாம். விஷ்ணு பகவான் வழிபாட்டால் நன்மை அடைவீர்கள். ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால் அமைதி பெறலாம்.

விருச்சிகம்:

இன்று உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சொந்தங்கள் மத்தியில் சில தொந்தரவுகள் உருவாகும். கவனம் அவசியம்.

தனுசு:

இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். கணவன் மனைவி இடையே உள்ள அன்பு அதிகரிக்கும். சிலருக்கு தாய் வழி உறவால் நன்மை உண்டாகும்.

மகரம்:

இன்று உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை செய்வீர்கள். தாய்மாமன் உறவால் ஆதாயம் பெறுவீர்கள். தாய் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.

கும்பம்:

இன்று கடையில் உணவு எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் இடையே சில சிக்கல் ஏற்படலாம். முடிந்த அளவு இக்கட்டான சூழ்நிலையில் பொய் சொல்வதை தாவிர்த்தால் நன்மை உண்டாகும்.

மீனம்:

இன்று காலையில் இருந்து அலைச்சல் ஏற்படும். வாங்கி சம்பந்தமான சிக்கல் தீரும். விவசாயம் செய்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு வெற்றியை கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US