புரட்டி எடுக்க போகும் செவ்வாய்: ஏப்ரல் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் அவ்வப்பொழுது அவர்களின் இடத்தை மாற்றி கொண்டு இருப்பார்கள். அப்படியாக, நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவ்ர் தான் ஒரு மனிதனின் வீரம், நம்பிக்கை போன்றவைக்கு காரணியாக விளங்குகிறார். அதனால், செவ்வாய் பலவீனமாக இருந்தால், அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும்.
அந்த வகையில், செவ்வாய் பகவான் வருகின்ற ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி கடக ராசிக்கு செல்ல இருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு ஒரு வித மன உளைச்சலை கொடுக்கும். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் பகவான். ஆதலால் செவ்வாய் பகவானின் இடமாற்றம் இவர்களுக்கு பல்வேறு வகையில் சிக்கலாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபார இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக இருப்பது அவசியம். தேவை இல்லாத செலவுகளால் மன அமைதி இழக்க நேரிடலாம்.
கடகம்:
கடக ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பல்வேறு விதமான பிரச்சனைகளில் நிறுத்தி விடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகலாம். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் அதிகம் வரும் காலகட்டம் என்பதால் கவனமாக இருபத்து அவசியம். அல்லது பிரிவை கொடுத்து விடும். அலுவலகத்தில் உயர் ஆதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சியால் ஒரு வித பயம் உண்டாக்கும். அலுவகத்தில் உங்களுக்கு எதிராக உங்கள் உயர் அதிகாரிகள் செயல்பட வாய்ப்புள்ளது. உறவினர்களால் சில சிக்கல் உருவாகும். குடும்பத்தினருடன் பேசும் பொழுதும் மிக கவனமாக பேசவேண்டும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சில சிக்கல் உண்டாகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |