5 கிரக சேர்க்கையால் ராஜ யோகம் பெற போகும் ராசிகள்?

By Sakthi Raj Oct 24, 2024 12:30 PM GMT
Report

 தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த மாதம் 28 ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 7 ஆம் தேதி இரவு வரை சில ராசிகளுக்கு குரு, சனி, கேது, புதன் மற்றும் சூரியன் ஆகிய 5 கிரகங்கள் சாதகமாக இருக்கிறது.

இவ்வாறு ஐந்து கிரக சேர்க்கை நடைபெறுவது மிகவும் அரிது.இதன் விளைவாக சில ராசிகளுக்கு ராஜ யோகம் உருவாக போகிறது.அந்த ராசிகள் யார் என்று பார்ப்போம்.

5 கிரக சேர்க்கையால் ராஜ யோகம் பெற போகும் ராசிகள்? | 12 Rasi Palangal

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 5 கிரக சேர்க்கை பல மடங்கு பலன்களை தர போகிறது.வியாபாரம் செழிப்பாக நடைபெறும்.நீண்ட நாள் எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.அலுவலகத்தில் பதவி உயர்வு போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ராகு, செவ்வாய், சூரியன், சுக்கிரன் மற்றும் கேது சாதகமாக இருப்பதால் பல வழிகளில் வருமானம் அதிகரிக்கும்.நீண்ட நாள் மனவருத்தம் விலகி மனம் உற்சாகம் பெரும்.சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

கடகம்

கடக ராசிக்கு இந்த ஐந்து கிரக மாற்றங்கள் ஒரு திருப்பு முனையை கொடுக்க போகிறது.பல ஆண்டுகள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.வியாபாரத்தில் எதிர்ப்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த 5 கிரக சேர்க்கை வாழ்க்கையை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து செல்லும்.அண்ணன் தம்பி உதவி கிடைக்கும்.குடும்பத்தில் எல்லோரும் ஆதரவாக இருப்பார்கள்.பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி, குரு, புதன், சூரியன் மற்றும் சுக்கிரனும் சாதகமான பலன்களைத் தரும்.நீண்ட நாள் குழந்தை வரம் எதிர்பாத்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வேலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும்.வேலைக்காக வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US