இன்றைய ராசி பலன்(24.10.2024)

Report

மேஷம்

சூழ்நிலையை அறிந்து செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

ரிஷபம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வருவாய் வரும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

மிதுனம்

வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். மனதில் உண்டான குழப்பம் விலகும்.வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

கடகம்

உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். சிறு வியாபாரிகள் புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

எதிர்பாராத பிரச்னைகளை இன்று சந்திப்பீர். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.நேற்று வரை தடைபட்டிருந்த வேலை இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும்.

கன்னி

கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் கனவு இன்று நனவாகும்.

இராமாயண காலத்திற்கும் முன்பு தோன்றிய மிகவும் பழமை வாய்ந்த கோயில்

இராமாயண காலத்திற்கும் முன்பு தோன்றிய மிகவும் பழமை வாய்ந்த கோயில்

துலாம்

அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.எந்த ஒன்றிலும் உங்களின் நேரடிப் பார்வை செய்வது நல்லது. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.

விருச்சிகம்

நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுக்கு தேவையான வருமானம் அதிகரிக்கும் நாள்.

தனுசு

குடும்பத்தில் இக்கட்டான சூழல் ஏற்படும்.கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலையில் உங்கள் கவனம் சிதறும். நிதானமாக இருப்பது நல்லது.

மகரம்

சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

கும்பம்

திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் வரும்.தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.எதிர்பாராத விஷயம் நடக்கும்.

மீனம்

எந்த ஒரு காரியத்தையும் குலதெய்வ வழிபாட்டுடன் தொடர அது நிச்சயம் வெற்றி அடையும்.உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.வழக்குகள் சாதகமாகும்.குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US