மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா:30-ம் தேதி கொடியேற்றம்

By Sakthi Raj Aug 20, 2024 10:17 AM GMT
Report

மதுரை என்றாலே அம்மன் மீனாட்சி அம்மா தான்.சைவ சமயம் படி மதுரையில் தான் அதிக திருவிளையாடல் புராணம் நிகழ்ந்தது. அதில் சிவன் நடத்திய 12 திருவிளையாடல் புராணம் நடக்க இருக்கிறது.

அப்படியாக மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் இரவு சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெறும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா:30-ம் தேதி கொடியேற்றம் | 12 Thiruvilaiyadal Puranm Meenatchi Amman Koyil

5-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும், 7-ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 8-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 9-ம் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 10-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடக்கிறது.

11ஆம் தேதி காலை வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை 6:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் 12-ம் தேதி நரியை பரிதாக்கிய திருவிளையாடல் குதிரை கயிறு மாறிய திருவிளையாடல் நடக்கிறது.

13-ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. அன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் புட்டு தோப்புக்கு சென்று அங்கு புட்டு உற்சவம் நடைபெற்று இரவு 9 மணி அளவில் எழுந்தருளி திருக்கோவில் வந்து சேர்த்தியாவார்.

14-ம் தேதி விறகு விற்ற லீலை நடக்கிறது. 15-ம் தேதி காலை 8:35 மணிக்கு மேல் 8 59 மணிக்குள் சட்டத்தேர் நடக்கிறது. 16-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா:30-ம் தேதி கொடியேற்றம் | 12 Thiruvilaiyadal Puranm Meenatchi Amman Koyil

அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடக்கிறது.

இறைவன் மதுரையம்பதியில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய அம்சங்களாக அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US