தடைகளை ஏற்படுத்தும் 12 தோஷங்கள் - யார் கவனமாக இருக்கவேண்டும்
ஒருவரது ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் என்பது முக்கியமாக பார்க்கப்படும் ஒன்றாகும். அதாவது ராகுவிற்கு கேதுவிற்கு இடையில் மற்ற 7 கிரகங்களும் அடக்கம் பெற்று இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இதனால் அந்த ஜாதகர் பல சிக்கலை சந்திக்கக்கூடும் என்பது ஜோதிடத்தின் கருத்து. அப்படியாக, இந்த கால சர்ப்ப தோஷம் 12 வகையில் உள்ளது. அவற்றின் அமைப்பும் அதனால் விளையும் பாதிப்புகளை பற்றியும் பார்ப்போம்.
1. வாசுகி கால சர்ப்ப தோஷம் :
ஒருவருடைய ஜாதகத்தில் 3ம் ஈடத்தில் ராகுவும், 9 ம் இடத்தில் கேதுவும் இருந்தால் உண்டாகும் தோஷம் ஆகும். இந்த அமைப்பு இருந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும். நிறைய சிரமங்களுக்கு பிறகே பணம் சம்பாதிக்க முடியும்.
2. அனந்த கால சர்ப்ப தோஷம் :
ஒருவருக்கு அனந்த கால சர்ப்ப தோஷம் : லக்னத்தில் ராகுவும், ஜாதகத்தில் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்தால் அதற்கு அனந்த கால சர்ப்ப தோஷம் என்று பெயர். இவர்களுக்கு பல போராட்டங்களுக்கு பிறகே வாழ்க்கையில் வெற்றியை சந்திக்க முடியும்.
3. சங்க சூட கால சர்ப்ப தோஷம் :
ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் ராகுவும், 12 ம் இடத்தில் கேதுவும் இருந்தால் சங்க சூட கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகுந்த வலி வேதனையை சந்திக்க நேரிடும். இவர்கள் விருப்பங்கள் பல தடைகளுக்கு பிறகே நிறைவேறும்.
4. கடக கால சர்ப்ப தோஷம் :
ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் ராகுவும், நான்காம் வீட்டில் கேதுவும் இருந்தால் அவர்களுக்கு கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்கள் தாயின் உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அதிக ஈகோ பிரச்சனையால் இவர்கள் வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கக்கூடும்.
5. குளிகை கால சர்ப்ப தோஷம் :
ஜாதகத்தில் 8 ம் இடத்தில் ராகுவும், 2 ம் இடத்தில் கேதுவும் இருந்தால் ஏற்படும் நிலைக்கு குளிகை கால சர்ப்ப தோஷமாகும். இவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் அடிக்கடி பொருளாதார இழப்புகளை சந்திக்கக்கூடும்.
6.சங்கல்ப கால சர்ப்ப தோஷம் :
நான்காம் இடத்தில் ராகுவும், பத்தாம் இடத்தில் கேதுவும் இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு அடிக்கடி நிலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
7. பத்ம கால சர்ப்ப தோஷம் :
ஐந்தாம் இடத்தில் ராகுவும், 11 ம் இடத்தில் கேதுவும் இருந்தால் ஏற்படும் கால சர்ப்ப தோஷத்திற்கு பத்ம கால சர்ப்ப தோஷம் என்று பெயர். இவர்கள் தங்களின் உடல்நலனில் கவனமுடன் இருக்க வேண்டும். இவர்கள் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
8. மகா பத்ம சர்ப்ப தோஷம் :
ஆறாம் இடத்தில் ராகுவும், 12 ம் இடத்தில் கேதுவும் இருந்தால் அந்த நிலைக்கு மகா பத்ம கால சர்ப்ப தோஷம் என்ற பெயர். இவர்களுக்கு வாழ்க்கையில் அடிக்கடி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அமைதி இழந்து காணப்படுவார்கள்.
9. தக்ஷக சர்ப்ப தோஷம் :
ஏழாம் இடத்தில் ராகுவும், முதல் இடத்தில் கேதுவும் இருந்தால் இதற்கு தக்ஷக கால சர்ப்ப தோஷம் என்று பெயர். இவர்களுக்கு எப்பொழுதும் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவர்கள் ஒற்றுமையாக வாழ திருமணத்தில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
10. கார்கோடக சர்ப்ப தோஷம் :
இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் கார்கோடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு தொழில் ரீதியாக எப்பொழுதும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
11. விஷ்தார சர்ப்ப தோஷம் :
ஜாதகத்தில் 11 ம் வீட்டில் ராகுவும், ஐந்தாம் இடத்திலண் கேதுவும் இருந்தால் அதற்கு விஷ்தார கால சர்ப்ப தோஷம் என்று பெயர். இவர்கள் வாழ்க்கையில் எதற்கும் அதிக அளவிலான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த தோஷம் மிகவும் அபாயகரமானதாகும்.
12. சேஷ நாக சர்ப்ப தோஷம் :
ஜாதகத்தில் 11 ம் இடத்தில் ராகுவும், ஆறாம் இடத்தில் கேதுவும் இருந்தால் அதற்கு சேஷ நாக சர்ப்ப தோஷம் என்று பெயர். இவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத பண கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |