நவகிரகங்களில் இளவரசனாக இருக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலகட்டத்தில் அவருடைய ராசியை மாற்றுகிறார். மேலும், புதன் பகவான் தான் ஒருவரது பேச்சு, வியாபாரம் கல்வி, போன்ற விஷயங்களுக்கு காரணியாக இருக்கக்கூடியவர். இவர் மிதுன ராசி மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார்.
இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார். அவர் ஜூன் 22ஆம் தேதி வரையில் பயணம் செய்வார். இந்த பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில எதிர்பாராத நஷ்டத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு மூன்றாவது வீட்டில் புதன் பகவான் இருப்பதால், இவர்களுக்கு நிதி நிலையில் சில சிக்கல்களை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். குடும்பத்தில் தேவை இல்லாத சிக்கலை சந்திப்பீர்கள்.
கடகம்:
கடக ராசிக்கு 12ஆம் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். இதனால் இவர்களுக்கு எதிர்மறையான பல விளைவுகளை கொடுக்கக்கூடும். செய்யும் வேளைகளில் தடைகளும் எதிர்ப்புகளும் உருவாகும். பிறரிடம் பேசும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம்:
துலாம் ராசிக்கு புதன் பகவான் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்ய இருக்கிறார். இதனால் நீங்கள் நினைத்த விஷயங்கள் நடப்பதில் சில கால தாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு சற்று சங்கடத்தை கொடுக்கக்கூடும். வருமானத்தில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |