12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கை துணையிடம் இந்த ஒரு விஷயத்தை சொல்லவே மாட்டார்களாாம்
ஒவ்வொரு ராசிக்கும் இயல்பாகவே ஒரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளும் அவருடைய வாழ்க்கை துணையிடம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே மாட்டார்களாம். அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுக்கு வேலை போய்விடும் என்ற ஒரு பயம் எப்பொழுதும் இருக்கிறது. ஆனால், அதை வாழ்க்கை துணையிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.
ரிஷபம்:
கடன் செலவு சேமிப்பு தொடர்பான கவலை இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். எப்படி சமாளிப்பது என்று இவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.
மிதுனம்:
இவர்களுக்கு தூக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். ஆனால், வாழ்க்கை துணையிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று மறைத்து விடுவார்கள்.
கடகம்:
இவர்களுக்கு வாழ்க்கை துணை மற்றும் அம்மா வீடு இரண்டும் முக்கியம். எப்படி சமாளிப்பது என்பதை தெரியாமல் போராட்டத்தில் இருப்பார்கள்.
சிம்மம்:
அவர்களுடைய மரியாதை கௌரவம் குறைந்துவிடும் என்று எப்பொழுதும் பயந்து கொண்டே இருப்பார்கள். வெளியே சொல்ல மாட்டார்கள்.
கன்னி:
உடல் பற்றிய கவலைகள் எப்பொழுதும் இருக்கும். ஆனால், வெளியே சொன்னால் பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
துலாம்:
வாழ்க்கை துணையுடன் இந்த விஷயத்தை சொல்வதால் அவர்களுக்கு பிடிக்காமல் ஏதேனும் சண்டை வந்துவிடுமோ என்று சொல்வதில்லை.
விருச்சிகம்:
இவர்களுடைய பழைய காதல் பழைய காயங்களை வெளியே சொல்வதில்லை மறைத்து வைத்துவிடுவார்கள். தனுசு: இவர்களுடைய கனவு இலட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கின்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும்.
மகரம்:
பிள்ளைகள் படிப்பு வீடு எதிர்காலம் பற்றிய பெரிய கவலை அவர்களுக்கு ஏற்படும். வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
கும்பம்:
நண்பர்கள் சொந்தக்காரர்கள் இவர்களை எதாவது நினைத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும். ஆனால், வெளியே சொல்ல மாட்டார்கள்.
மீனம்:
தன்னுடைய துணைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை பற்றி இவர்கள் தினம் தினம் கவலை கொள்வது உண்டு. ஆனால், வெளியே செல்வதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |