ஆன்மீகம்: வீடுகளில் தவறியும் செய்யக்கூடாத முக்கியமான 14 விஷயங்கள்
ஆன்மீக சாஸ்திரத்தில் நம்முடைய வீடுகளில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவறியும் நம் வீடுகளில் செய்யப்படாத முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1. நம்முடைய வீடுகளில் ஒரு பொழுதும் உடுத்திய பழைய துணிகளை கதவுகளின் மீது போடக்கூடாது.
2. நம்முடைய வீடுகளில் வெட்டிய நகங்களையும் முடியையும் உடனே அகற்றி விட வேண்டும்.
3. அதேபோல் ஒருபொழுதும் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் நம்முடைய தலையை சொரியக்கூடாது.

4. தவறியும் நாம் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு குளிக்க கூடாது.
5. வீடுகளில் சாப்பிடக்கூடிய உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.
6. எந்த சூழ்நிலையிலும் ஈரத் துணியை உடுத்திக் கொண்டு வீடுகளில் சாப்பிடக்கூடாது.
7. தாய் தந்தை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று முடி வெட்டுதல் அல்லது ஷவரம் செய்தல் கூடாது.
8. வீடுகளில் நாம் அமரும் பொழுது இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக் கொண்டு நிற்பதோ அல்லது உட்காரவும் கூடாது.

9. பெண்கள் மஞ்சள் கயிறுகளில் மட்டுமே தங்களுடைய மாங்கல்யத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
10. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷணம் செய்யக் கூடாது.
11. கோவிலில் தரக்கூடிய துளசியை பெண்கள் ஒரு பொழுதும் தலையில் வைக்க கூடாது.
12. வீடுகளில் பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலமிடக்கூடாது.
13. கர்ப்பிணி பெண்கள் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்தல் கூடாது.
14. அமாவாசை திவசம் ஆகிய நாட்களில் வீடுகளில் பெண்கள் கோலம் போடக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |