வீடுகளில் வேல் வைத்திருந்தால் இனி இந்த தவறை பெண்கள் செய்யாதீர்கள்
ஆன்மீகம் என்பது மனிதர்களை வழிநடத்தக்கூடிய ஒரு வழிகாட்டியே ஆகும். அப்படியாக ஆன்மீகத்தில் சில விஷயங்கள் நாம் செய்ய வேண்டும் என்றும் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்கு பின்னால் நிறைய காரண காரியங்கள் இருக்கிறது.
அதில் சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தாலும், சில விஷயங்கள் பலருக்கும் தெரியாத ஒரு முக்கியமான ஆன்மீக குறிப்புகளாக இருக்கிறது. அப்படியாக ஆன்மீக ரீதியாக நம் வாழ்க்கையில் மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான குறிப்புகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

1. வீடுகளில் பூஜை செய்யும் பொழுது மணியின்றி பூஜை செய்தல் கூடாது.
2. கோவில் வழிபாடுகளில் பலிபீடம் கொடிமரம் ஆகிய இடத்தில் மட்டுமே நாம் விழுந்து வழிபாடு செய்ய வேண்டும்.
3. கோயிலின் கோபுர நிழல் கொடிமரம் நிழல் ஆகியவற்றை நாம் மிதித்து விடக்கூடாது.
4. சிலர் சண்டிகேஸ்வரரை வழிபாடு செய்யும் பொழுது கைகளை தட்டியபடி வழிபாடு செய்வார்கள். ஆனால் அவரை வழிபாடு செய்யும் பொழுது மிகவும் அமைதியான நிலையில் தான் வழிபாடு செய்ய வேண்டும்.
5.பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது நிச்சயம் துளசி தீர்த்தம் சடாரி ஆகிவை வாங்கிக் கொண்டுதான் வரவேண்டும்.
6. எக்காரணத்தைக் கொண்டும் ஈர உடைகளை உடுத்திக் கொண்டு சுவாமியை வழிபாடு செய்யக்கூடாது.
7. அதேபோல் கண்ணாடி பார்த்தவாறு திருநீறு பூசக்கூடாது.
8. விநாயகரை வழிபாடு ஒருமுறை சுற்றி வந்து வலம் வந்தாலே போதுமானது.
9. சிவன் கோவிலுக்கு சென்றால் முடிந்த அளவிற்கு நம்மால் முடிந்த காணிக்கை கட்டாயம் போட்டு வர வேண்டும்.

10. இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எந்த ஒரு நதிகளிலும் நாம் குளிக்க கூடாது.
11. முடிந்தவரை அமாவாசை நாட்களில் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.
12. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் நிச்சயமாக வீடுகளில் கோலம் போட்டு விளக்கு ஏற்றாமல் செல்லக்கூடாது.
13. அடியார்கள் மற்றும் சிவன் தீட்சை பெற்றவர்களை தவிர்த்து பிறர் எவரும் திருநீற்றை தண்ணீரில் குழைத்து பூசிக்கொள்ளக் கூடாது.
14. பெண்கள் வீடுகளில் வேல் வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்யக்கூடாது. ஆகம முறைப்படி ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
15. பிரசாதமாக வாங்கிய தேங்காயை சமையலில் சேர்த்த பிறகு அந்த உணவை மீண்டும் நெய்வேத்தியம் செய்யக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |