சகல நன்மைகள் அருளும் 16 வகை சிவலிங்கங்கள்
By Sakthi Raj
சிவன் அவன் நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அதாவது நம் வாழ்வில் உள்ள கர்ம வினைகள் விலகி வாழ்க்கையின் உண்மைத்துவம் நாம் புரிந்து கொள்வோம்.அப்படியாக சிவபெருமானை நாம் ஒவ்வொரு வடிவில் தரிசனம் செய்வதால் நமக்கு ஒவ்வொரு பலன் கிடைக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
- ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து பூஜித்தால் பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விலகும்.
- புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட, முக்தி கிடைக்கும்.
- பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் ஆசை பட்ட அனைத்தும் நடக்கும்.
- சந்தனத்தால் லிங்கம் செய்து வழிபட வாழ்க்கையில் உண்டான அனைத்து பிரச்சனைகளும் அகலும்.
- விபூதியில் லிங்கம் செய்து வழிபட எல்லா வித ஆசீர்வாதங்களை கிடைக்கும்.
- மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ்நாள் கிடைக்கும்.
- அரிசி மாவு கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- அன்னத்தால் சிவலிங்கம் செய்து வழிபட, உணவுப் பற்றாக்குறை நீங்கும்.
- பழங்களால் லிங்கம் செய்து வழிபட சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
- தயிர் கொண்டு லிங்கம் செய்து வழிபட, நற்குணத்தைப் பெறலாம்.
- தண்ணீரால் லிங்கம் செய்து வழிபட ஈசன் அனைத்தையும் மேன்மையாக்கிக் காட்டுவார்.
- முடிச்சிட்டு நாணலால் லிங்கத்தை வழிபட, முக்தி கிடைக்கும்.
- சர்க்கரை, வெல்லம் இவற்றால் லிங்கம் செய்து வழிபட, விரும்பிய வாழ்க்கையும் இன்பமும் கிடைக்கும்.
- பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட, நோயற்ற வாழ்வு கிடைக்கும் .
- பசு வெண்ணையால் லிங்கம் செய்து வழிபட, மன மகிழ்ச்சி ஏற்படும்.
- ருத்ராட்சத்தால் லிங்கத்தை செய்து வழிபட, நல்ல அறிவு கிடைக்கும்.
எம்பெருமான் ஈசனை வழிபட பிறப்பின் ரகசியமும் வாழ்வின் புரிதலும் கிடைக்கும்.ஆகையால் ஒவ்வொரு சிவலிங்கத்தை நாம் முடிந்த அளவு தரிசனம் செய்து நாம் அவரின் பரிபூர்ண அருள் பெற்று வாழ்வின் உன்னத பயனை அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |