காவல் தெய்வம் கருப்பசாமியின் சக்திவாய்ந்த 18 வடிவங்கள் என்ன தெரியுமா?
கிராமப்புறங்களில் காவல் தெய்வமாகவும் பல குடும்பங்களின் குலதெய்வமாகவும் இருக்கக்கூடிய கருப்பசாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுபடுகிறார். அப்படியாக, ஒவ்வொரு ஊர்களின் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றது.
அந்த வகையில் மொத்தம் 108 வகையான கருப்பசாமிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் பெரும்பாலான மக்களால் அறியப்பட்ட முக்கியமான 18 வகையான கருப்பசாமி வடிவங்கள் பற்றியும் அதன் பெயர்காரணம் பற்றியும் பார்ப்போம்.
18 வகையான கருப்பசாமி வடிவங்கள் :
1. பதினெட்டாம்படி கருப்பு :
இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்கமாட்டாரகள். மதுரை மதுரை அழகர்கோவில் கோட்டையின் 18வது படியில் வீற்றிருந்து எல்லையைக் காப்பதால் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. ஒருமுறை அழகர் கோவிலுக்குள் திருட வந்த 18 நபர்களை கருப்பனுடைய பேராற்றலால் அழித்து, அவர்களை படிகளாக்கி, அந்த படிகள் மேலே சிலையாக இருந்து அழகர்மலை கோவிலை பாதுகாத்து வருவதோடு மதுரை மக்களுக்கு இன்றளவும் காவல் தெய்வமாக உள்ளார்.
2. சங்கிலிக் கருப்பு :
சங்கலிகருப்பன் என்று அழைக்கப்படும் இவர் கைகளில் ஆக்ரோஷமான இரும்புச் சங்கிலியை ஏந்தி இருப்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. அது மட்டும் அல்லாமல் இரவு நேரத்தில் அவர் எல்லையில் நுழையும் தீய சக்திகளை அவருடைய சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்று எல்லையிலேயே அழித்தார்.
3. நொண்டி கருப்பு :
ஒரு முறை போரில் தீமையை அழிக்கும் பொழுது கருப்பன் காலில் காயம் ஏற்பட்டதால் நொண்டி கருப்பு என்று பெயர் வந்தது. இவர்களுக்கு காலில் அடிபட்டு இருந்தாலும் நள்ளிரவில் எல்லையை தாக்க வந்த எதிரிகளை வேட்டையாடினார்.
4. கோட்டை கருப்பு :
கோட்டை கருப்பு என்பவர் மன்னர்களின் கோட்டை வாயிலையும், மக்களையும் அரணாக இருந்து காக்கக்கூடியவர். ஒருமுறை நள்ளிரவில் எதிரி நாட்டு படைகள் கோட்டையை தாக்க முயன்ற பொழுது கோட்டை கருப்பு அரண்மனை வாயிலில் பிரம்மாண்ட உருவமெடுத்து அவர்களை ஓடஓட விரட்டினார்.
5. ஒண்டிப்புலி கருப்பு :
இவர் காட்டிலும் ஊர் எல்லையிலும் தனியாக புலியாக நின்று பதுங்கி பாய்வதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. ஒரு முறை அடர்ந்த காட்டில் வழிப்போக்கர்களை கொள்ளையடிக்க வந்த கூட்டத்தை தனியாக நின்று கொண்டு புலி போல் பாய்ந்து விரட்டி அடித்தார்.
6. மலையாள கருப்பு :
இவர் கேரள தேசம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்ததால் இவருக்கு மலையாள கருப்பு என்ற பெயர் வந்தது. மலையடிவார கிராம மக்களை பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக கட்டுகளிலிருந்து இவர் விடுவித்து காப்பாற்றி வருகிறார்.
7. முத்து கருப்பு :
முத்து கருப்பு என்கின்ற கருப்பசாமி மனம் தூய்மையாகவும் பிரகாசமான தோற்றமும் கொண்டவர். இவரை நம்பி வந்த ஏழை விவசாயியின் விளைநிலத்தை அழிக்க வந்த கொடிய நச்சுப் பாம்புகளை இவருடைய அருளால் ஒழித்து விரட்டினார் என்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது.
8. மாயக் கருப்பு :
இவர் எதிரிகளை அழிக்க மாய வித்தைகளை செய்து நிலை குறைய வைப்பதில் வல்லவராக இருந்தார். ஒருமுறை ஊருக்குள் புகுந்த கொள்ளையர்களின் கண்களுக்கு இவரும் அவருடைய குதிரையும் பல உருவங்களாக தோன்றி வந்த இடம் தெரியாமல் ஓட விரட்டியதால் இவருக்கு மாயக்கருப்பு என்று பெயர் வந்தது.

9. ஆகாய கருப்பு :
எல்லையில்லாத அந்த ஆகாயத்தில் இருந்து பறந்து வந்து மக்களை காக்க கூடியவராக இருக்கிறார். வான்வெளியில் இருந்து இறங்கி வந்து கிராமத்து மக்களை அச்சுறுத்திய மாயாஜால அரக்கனை வதம் செய்தவர் என்பதால் இவருக்கு ஆகாய கருப்பு என்று பெயர் வந்தது.
10. பெரிய கருப்பு :
இவர் ஊர் எல்லைகளை கம்பீர தோற்றத்துடன் காக்கக்கூடிய மூத்த தெய்வமாக கருதப்படுகிறார்.
11. சின்ன கருப்பு :
இவர் இன்றளவும் கிராமப்புற எல்லைகளில் சிறு தெய்வமாக வழிபடும் கருப்பசாமியின் வடிவமாக இருக்கிறார் .
12. சந்தனக் கருப்பு :
இந்த கருப்பசாமி உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி கொடுப்பவர். ஆகையால் இவருக்கு சந்தன கருப்பு என்ற பெயர் வந்தது.
13. மாசாணக் கருப்பு :
சுடுகாட்டு பகுதிகளுக்கு காவல் காக்கக்கூடிய தெய்வமாக இருப்பதால் இவருக்கு மாசாணக் கருப்பு என்ற பெயர் வந்தது.
14. முப்புலி கருப்பு :
இந்த கருப்பசாமி உக்கிர வடிவமாக மூன்று புலிகளை வாகனமாகக் கொண்டதாக நம்பப்படுவதால் இவர் முப்புலி கருப்பசாமி என்ற பெயர் பெற்றார் .
15. சப்பாணி கருப்பு :
கருப்பசாமியின் உடல்களில் சிறு குறைபாடுகள் இருந்ததாலும், இவர் பக்தர்களின் ஆரோக்கிய குறைபாடுகளை போக்கக்கூடியவராகவும் இருப்பதால் இவருக்கு சப்பாணி கருப்பசாமி என்ற பெயர் வந்தது.
16. பாரி கருப்பு :
ஊர் எல்லை பகுதி மற்றும் காடுகளை காக்கக்கூடிய காவல் தெய்வமாக இருக்கிறார்.
17. உத்திர கருப்பு :
இந்த கருப்பசுவாமி உத்திர நட்சத்திரத்துடன் வடதிசையை காப்பவராகவும் இருப்பதால் இவருக்கு உத்திரக் கருப்பு என்ற பெயர் வந்தது.
18. எல்லை கருப்பு :
கிராமப்புறங்களில் ஊர்களின் எல்லையை அமர்ந்து காக்கக்கூடிய தெய்வமாக இருப்பதால் இவருக்கு எல்லை கருப்பு என்ற பெயர் வந்தது
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |