18 ஆண்டுகள் நடக்கும் ராகு திசை? யாருக்கு யோகம் கொடுக்கும்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களின் அமைப்புகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த ஜாதகருக்கு நடக்கக்கூடிய தசா புத்திகளும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிரகங்களின் அமைப்பு அவர்களின் வாழ்க்கை என்றால், அவர்களுக்கு நடக்கக்கூடிய தசா புக்தி அவர்களுக்கு சில மாறுதல்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அப்படியாக ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு திசை நடக்கிறது என்றால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? ராகு திசையானது எத்தனை வருட காலம் நடக்கும் என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
1. ராகு திசையில் முதலாவதாக வரக்கூடியது ராகு புத்தி. இவை 2 வருடம் 8 மாதம் 12 நாட்கள் நடக்கிறது. இந்த நேரத்தில் ராகு ஒருவருக்கு பலம் பெற்று இருந்தால் அவர்கள் மனதில் உற்சாகம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், அரசு வழியில் அவர்களுக்கு நல்ல ஆதாயமும் கிடைக்கும். அதுவே ராகு ஒருவர் ஜாதகத்தில் பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு மன ரீதியாக சில பாதிப்புகள், தீராத நோய் ஊரை விட்டு வேறு இடத்திற்கு மாறுதல் குடும்பத்தில் சண்டை போன்ற சூழ்நிலை உருவாகும்.
2. ராகு திசையில் ராகு புத்திக்கு அடுத்ததாக வரக்கூடியது குரு புத்தி. இவை 2வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறுகிறது. ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று அமையப்பெற்று இருந்தால் அவர்களுக்கு பண வரவும் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கும் புகழும் கிடைக்கும். அவர்கள் சொந்த ஊரில் வாழ்பவர்களாக இருந்தால் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். அதுவே குரு பகவான் பலம் இழந்து அமையபெற்று இருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியத்தில் தடை, தொழில் மற்றும் அலுவலகங்களில் சில அவப்பெயர்கள் உண்டாகும்.
3. ராகு திசையில் குரு புத்திக்கு அடுத்ததாக சனி புக்தி. இது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அவர்கள் சுகமான வாழ்க்கையும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் பண வரவும் நல்ல விதத்தில் அமையும். ஆனால் சனிபகவான் பலம் இழந்து காணப்பட்டால் அவர்களுக்கு எடுத்த காரியங்களில் தடை, வம்பு வழக்குகள், புத்திர தோஷம் கடன் தொல்லை அவமானம் போன்ற நிலைகளை சந்திக்கக்கூடும்.
4. ராகு திசையில் சனி புத்திக்கு அடுத்ததாக வரக்கூடியது புதன் புத்தி. இவை 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெற கூடியது. புதன் பகவான் பலம் பெற்று இருந்தால் இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய வீடு கட்டும் யோகம் உருவாகும். ஆனால் புதன் பகவான் பலம் இழந்து காணப்பட்டால் குடும்பத்தில் பிரிவு ஆரோக்கிய குறைபாடுகள் பகைவர்களால் சண்டைபோன்ற பிரச்சனைகள் உருவாகும்.
5. ராகு திசையில் புதன் புத்திக்கு அடுத்ததாக வரக்கூடியது கேது புத்தி. இவை ஒரு வருடம் 18 நாட்கள் நடைபெறும். கேது பகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்ற இடத்தில் அமைந்து இருந்தால் அவர்களுக்கு வண்டி வாகனம் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு பெறுவார்கள். ஆனால் கேது பகவான் சரியில்லாத நிலையில் இருந்தால் கணவன் மனைவி இடையே பிரிவு கோபம் நஷ்டம், விஷத்தால் கண்டம் போன்றவை நிகழும்.
6. ராகு திசையில் கேது புக்திக்கு அடுத்ததாக வரக்கூடியது சுக்கிர புத்தி. இவை 3 வருடம் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் இவர்கள் உயர் பதவிக்கு செல்வார்கள். சமுதாயத்தில் உங்கள் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களை வந்து சேரும். திருமண யோகத்தை கொடுக்கும். ஆனால் சுக்கிர புத்தி சரியில்லாமல் இருந்தால் அவர்கள் திருமண வாழ்க்கையில் அவமானம் வியாதி மற்றும் தோல்வி போன்றவை சந்திக்க போகும்.
7. ராகு திசையில் சுக்கிர புத்திக்கு அடுத்ததாக வரக்கூடியது சூரிய புத்தி. இவை பத்து மாதம் 24 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் சூரிய பகவான் பலம் பெற்று இருந்தால் அவர்கள் அரசு வழியில் உயர் பதவிகள் பெறுவார்கள். தைரியம் துணிவு பிறக்கும். ஆனால் சூரிய பகவான் பலம் இழந்து இருக்கும் பொழுது அவர்களுக்கு தலைவலி, இருதய கோளாறு தொழில் ரீதியாக நஷ்டம் நிம்மதியற்ற வாழ்வை சந்திக்கக்கூடும்.
8. ராகு திசைகயில் சூரிய புத்திக்கு அடுத்ததாக வரக்கூடிய சந்திர புக்தி. இவை ஒரு வருடம் ஆறு மாதம் நடைபெறும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று அமைந்து விட்டால் அவர்களுக்கு மன உறுதி கிடைக்கும். ஆனால் சந்திரன் பலம் இழந்து காணப்பட்டால் தாய்மொழி உறவால் சில சங்கடங்களும் தாய்க்கு சமயங்களில் கண்டம் போன்ற நிகழ்வுகளும் உண்டாகும்.
9. ராகு திசை சந்திர புத்திக்கு அடுத்ததாக வரக்கூடியது செவ்வாய் புத்தி. இவை ஒரு வருடம் 18 நாட்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் இவர்களுக்கு வண்டி வாகன யோகம் மிகப்பெரியதாக கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். உயர் பதவிகள் பெறுவார்கள். ஆனால் செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால் அவர்கள் உடல் நிலையில் பாதிப்பு விபத்து சகோதரர்களுக்கிடையே பகை உத்தியோகத்தில் சில தடுமாற்றங்கள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







