உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் உங்களை காக்கும் தெய்வம் யார் தெரியுமா ?
ஜோதிடம் என்பது ஒரு மனிதனுடைய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை ஆகும். அப்படியாக ஒரு சிலருக்கு ஒவ்வொரு தெய்வங்கள் மீதும் ஒவ்வொரு நம்பிக்கையும் பிரியமும் இருக்கும்.
அந்த நம்பிக்கையும் பக்தியும் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் அவர்களுடைய ஜாதக கட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக சொல்கிறார்கள். அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் தான் அவர் எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறார் என்பதை சொல்லக்கூடிய இடம் ஆகும்.
அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் மிக வலிமையாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அவர்களுடைய இஷ்ட தெய்வங்கள் அமைகிறது. அதாவது, ஒருவருக்கு சூரியன் வலுவாக இருந்தால் அவர்கள் அக்னி என்ற யாகம் வளர்த்து தெய்வத்தை வழிபாடு செய்வார்கள். காரணம் சூரிய பகவான் அக்னிக்கு சொந்தக்காரர்.
அதுவே ஒருவருக்கு சந்திர பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் தெய்வங்களுக்கு அவர்களை அறியாமல் நிறைய நெய்வேத்தியங்கள் படைத்தும் தெய்வ காரியங்களுக்காக அன்னதானம் செய்தும் வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் வலுத்திருந்தால் அவர்கள் புல்லாங்குழல் இசையுடன் பாடல் பாடி தெய்வத்தை வழிபாடு செய்வார்கள். இவர்களில் பலருக்கும் கிருஷ்ண பகவான் மீது அதீத அன்பு இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கிறது என்றால் அவர்கள் தெய்வங்களுக்கு அழகிய பட்டாடைகளும் அலங்காரமும் செய்து வெள்ளி கிரீடம் தங்கம் போன்ற அணிகலன்கள் அணிவித்து தெய்வத்தை ரசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.
ஒருவருக்கு குரு பகவான் ஜாதகத்தில் வலுத்திருக்கிறார் என்றால் இவர்கள் சாதாரண வழிபாட்டை விரும்ப மாட்டார்கள். எப்பொழுதும் தெய்வ மந்திரங்களை பாராயணம் செய்து இறைவனுக்கு பட்டாடைகள் படைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஒருவருக்கு செவ்வாய் பகவான் வலுத்திருந்தால் உக்கிரமான தெய்வங்களை இவர்கள் வழிபாடு செய்ய விரும்புவார்கள். உக்கிர தெய்வங்கள் மீது இவர்களுக்கு இயற்கையாகவே இவர்களுக்கு நம்பிக்கை இருக்கும்.
ஒருவருக்கு சனி பகவான் வலுத்திருந்தால் அவர்கள் கடும் விரதம் மேற்கொண்டும் தவம் இருந்தும் தெய்வ தரிசனத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆக ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்புகள் பொருத்தும் அவர்கள் தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







