சூரிய கிரகணம் 2024: இந்நேரத்தில் கோவில் மூடப்படுவது ஏன்?
சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் என வருடத்தில் 4 அல்லது 5 கிரகணங்கள் ஏற்படும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான சூரிய கிரகணம் வரவிருக்கிறது. இந்த நாளில் ஏன் கோயில்கள் மூடப்படுகின்றது என்பது குறித்து பார்க்கலாம்.
2024 சூரிய கிரகணம்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் நிகழ்வே சூரிய கிரகணமாகும். அவ்வாறு நிகழும் நேரத்தில் வானில் இருள் சூழ்ந்து காணப்படும்.
2024 ஆம் ஆண்டில் இந்த முழு சூரிய கிரணமானது ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த நிகழ்வானது வட அமெரிக்கா, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களால் பார்க்க முடியும் என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நேரத்தில் கோவில் மூடப்படுவது ஏன் என்று பார்க்கலாம்.
கோவில் மூடப்படுவது ஏன்?
கிரகணம் என்பது தவறான விடயமாக கருதப்படுகிறது. எனவே இந்துக் கோயில்கள் பெரும்பாலும் மூடப்பட்டு இருக்கும்.
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேதுவின் சுழற்சி முக்கியமான செயலாகும். இது மற்றைய கிரகங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
கிரகண நேரத்தில் கோவிலில் உள்ள தெய்வத்தை சுற்றி இருக்கும் ஒளியில் பிரச்சினைகள் ஏற்படும் என நம்பப்டுகிறது.
கிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நேர்மறை எதிர்மறை வெளியிடும். அந்த ஆற்றலானது பூமி முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கத்தை குறைப்பதற்காகவே கோவில் கருவறையில் இருக்கும் தெய்வத்தின் சன்னதி மூடப்படும்.
அந்த எதிர்மறை ஆற்றலானது புனிதமான இடத்தை பாதித்து விடும் என்பதற்காகவே கோயில்கள் மூடப்படுகின்றது.
எந்த கோயில்கள் திறக்கப்பட்டு இருக்கும்?
சூரிய கிரகணத்தின் போது கோயில் சென்று தோஷங்களை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் என நினைப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி காளஹதீஸ்வரர் கோவில் சென்று வழிப்படலாம்.
இந்த கோயிலானது எந்த ஒரு கிரகணம் நிகழ்ந்தாலும் மூடப்படுவதில்லை. பூஜைகள் வழமைப் போல் நடைபெறும். இந்த கோயிலில் ராகு கேதுவிற்கான பரிகாரத்தை செய்யலாம்.
உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலும் கிரகண நேரத்தில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மேலும் கிரகண நேரத்தில் கோயிலுக்கு செல்வதற்கு பதிலாக வீட்டில் இருந்து சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருப்பது சிறந்த பலனை தரும்.