நாளை முடிவிற்கு வரும் சனியின் வக்ர நிலை- இனி இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்
ஜோதிடத்தில் சனி பகவான் நீதி மானாகவும் நம்முடைய கர்மங்களை போக்கக்கூடியவருமாக இருக்கிறார். மேலும் கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது கட்டாயமாக சனி பகவான் தான். அந்த வகையில் சனி பகவானின் பெயர்ச்சி பலரையும் பல வகையில் ஒரு அச்சத்திற்கு தள்ளுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருந்தார். இது சுமார் 138 நாட்கள் வரை நீட்டித்தது. இந்த நிலையில் நாளை 28 ஆம் தேதி அன்று சனிபகவான் உடைய வக்ர நிலையானது முடிவிற்கு வருகிறது.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு தங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த கஷ்டங்கள் யாவும் விலகி ஒரு திடீர் திருப்பங்களை பெறக்கூடிய அமைப்பு உருவாகி போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினருக்கு சனி பகவான் உடைய இந்த வக்ர நிவர்த்தியானது இவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய விடுதலையை கொடுக்கப் போகிறது. அதாவது இவர்கள் நீண்ட நாட்களாக கடன் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருந்தவர்களாக இருந்தால் கட்டாயமாக அவையெல்லாம் விலகி இவர்களுக்கு ஒரு புதிய பாதை தொடங்கக்கூடிய ஒரு அற்புதமான காலமாக இருக்கப்போகிறது. அவர்களுடைய வாழ்க்கையில் சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நல்ல முடிவை பெறப்போகிறது.
துலாம்:
துலாம் ராசியினருக்கு சனி பகவான் உடைய இந்த வக்ர நிலையானது அவர்கள் உடல் நிலைகயிலும் வழக்கு விஷயங்களிலும் ஒரு நல்ல திருப்பத்தை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு திடீர் பணவரவு அதிர்ஷ்டத்தை உண்டாக்கி ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இவர்கள் இந்த காலகட்டங்களில் சொத்துக்களில் சந்தித்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகி ஒரு நிம்மதியான வாழ்க்கையை பெறப்போகிறார்கள். சிலருக்கு வேலை மாற்றம் அவர்கள் நினைத்தது போல் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான கால அமைப்பாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர நிவர்த்தியானது அவர்களுடைய வாழ்க்கையில் சந்தித்து வந்த தீய கண்களின் பிடியில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு எதிரிகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் செல்ல போகிறார்கள். பொருளாதார ரீதியாக இவர்கள் நல்ல முன்னேற்றத்தையும் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு நல்ல ஒரு பயண பாதையையும் இவர்கள் பெறப்போகிறார்கள். சனிபகவானுடைய முழு அருள் இவர்களுக்கு கிடைத்து நல்வாழ்வு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |