நம்முடைய கெட்ட கர்மாக்களை கரைக்கும் சக்தி வாய்ந்த கோவில் எங்கு உள்ளது தெரியுமா?
மனிதர்கள் நம் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் சில நேரங்களில் பாவங்களையும் கெட்ட கர்ம வினைகளையும் சேர்த்து விடுகின்றோம். ஆக இந்த கெட்ட கர்ம வினை ஆனது ஒரு மனிதனுக்கு அதிக அளவில் தீமைகளை கொடுக்கிறது.
அந்த வகையில் ஏதோ ஒரு பிறவியில் அல்லது இந்த பிறவியில் தெரியாமல் செய்த பாவங்களுக்காக அனுபவிக்க கூடிய கெட்ட கர்ம வினைகளை போக்கக்கூடிய ஒரு அற்புதமான கோயில் தமிழ்நாட்டில் உள்ளது. இங்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைப்பதை நாம் பார்க்க முடியும்.
மேலும், இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தந்து வழிபாடு செய்கிறார்கள். அந்த கோவிலை பற்றி பார்ப்போம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்து இருக்கிறது புகழ் பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில். இங்கு இருக்கக்கூடிய ராமநாதசுவாமி பாவங்களை போக்க கூடியவராக இருந்து அருள் பாலித்து வருகிறார்.

மேலும், ராமநாத சுவாமி கோவில் ராமாயண காலத்துடன் தொடர்பு கொண்டது. அதாவது ராம பிரான் ராவணனை கொன்று பாவத்தை போக்குவதற்காக இங்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக ஐதீகம்.
அப்படியாக, இங்கு நாம் சென்று வழிபாடு செய்ய நம்முடைய பாவங்களும் கர்ம வினைகளும் விலகிக் கடவுளுடைய ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்து ஒரு நல்ல வளர்ச்சி அடையலாம் என்று சொல்கிறார்கள். மேலும், இந்த கோயிலில் மிக முக்கியமான விசேஷங்களும் சக்தி வாய்ந்த ஒன்றாகவும் இருக்கக் கூடியது 22 தீர்த்தங்களில் நீராடுதல்.
இந்த தீர்த்தங்களில் நீராடும் பொழுதுஒருவருடைய பாவங்களும் கர்மவினைகளும் முழுமையாக விலகுவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தில் நீராடுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களுடைய பிரார்த்தனையை வைக்கிறார்கள்.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு முன்னதாக முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும். அக்னி தீர்த்தம் என்பது கடல். அந்த கடலில் முதலில் நீராடி விட்டு பிறகு கோயிலுக்குள் சென்று பிற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
அதோடு பாவங்களை கரைக்கக் கூடிய இடம் என்பதால் இறந்தவர்களுடைய அஸ்தியை கரைப்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து இங்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.
ஆக கட்டாயமாக ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட நாட்கள் தடைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டு இருக்க கூடிய நிலை இருந்தால் ராமேஸ்வரம் ஆலயம் சென்று இந்த 22 தீர்த்தங்களின் நீராடினால் நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |