2025 ஆவணி அமாவாசை எப்பொழுது? அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினமானது வருகின்றது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் அமாவாசை எப்பொழுது வருகின்றது? அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று பார்ப்போம். எல்லா மாதமும் வரக்கூடிய அமாவாசை ஒவ்வொரு தனி சிறப்புகள் கொண்டது.
அப்படியாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய பட்சத்திற்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் அது இன்னும் கூடுதல் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதால் நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷங்கள் விலகுகிறது.
அதோடு நம் குடும்பத்தினருக்கு நம் முன்னோர்களின் முழு ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும். இந்த ஆவணி மாத அமாவாசையை பிதோரி அமாவாசை என்றும் கூறுவார்கள். இந்த நாளில் பெண்கள் துர்கா தேவியை மனம் உருகி விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுடைய குடும்பம் நல்ல ஆரோக்கியத்தோடும் செல்வ செழிப்போடும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு ஆவணி மாதம் அமாவாசை ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் பகல் 12.54 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 23 பகல் 12. 27 வரை அமாவசை திதி இருக்கிறது.
இந்த நாளில் நம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த தானம் செய்வதும், புனித நீர்களில் நீராடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால் நமக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கிறது. அதே சமயம் அன்றைய தினம் நாம் இந்த ஏழு விஷயங்களை மட்டும் செய்யக்கூடாது என்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
1. அமாவாசை தினங்களில் நம்முடைய இறந்த முன்னோர்கள் நம்முடைய வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்றைய தினம் வீடுகளில் மாமிசம் சமைத்து சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களுக்கு அவ மரியாதை செய்வதற்கு சமமாகும். அதே சமயம் அன்றைய தினம் சைவ உணவுகளை சமைத்து முன்னோர்களுக்கு படைத்து நாமும் அதை உண்டு வழிபாடு செய்ய வேண்டும்.
2. இந்த நாளில் நாம் சிரார்த்தம் தர்ப்பணம் ஆகிய சடங்குகளை செய்யாமல் தவிர்ப்பதும் அலட்சியம் செய்வதும் கூடாது. இவை நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பொதுவாகவே பித்ரு காரியங்களை செய்ய தவறியவர்கள் வீடுகளில் நிம்மதியின்மையும், செய்யும் செயல்களில் தடையும் சந்திக்க கூடும்.
3. இந்த நாளில் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதும் சில முக்கியமான பொருட்களை வாங்குவதும் தவிர்ப்பது நல்லது. இந்த நாளில் முக்கிய தொடக்கங்களை செய்வதும் தவிர்ப்பது நல்லது.
4. அமாவாசை தினத்தன்று சில முக்கியமான உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதில் கொண்டக்கடலை, கீரை, பார்லி, முள்ளங்கி, சுரக்காய் வெள்ளரிக்காய் பழகு உணவுகள் பாகற்காய் போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். இதுவும் நம் முன்னோர்கள் அவ மதிப்பதற்கு சமம் என்கிறார்கள்.
5. அமாவாசை தினங்களில் முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.
6. அமாவாசை தினத்தன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதும் தலைக்கு எண்ணெய் வைப்பதும் நமக்கு பித்ரு தோஷத்தை உண்டாக்கும்.
7.மேலும், அமாவாசை தினம் அன்று நாம் மறந்தும் சில பொருட்களையும் வாங்க கூடாது. அதில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை கட்டாயம் வாங்க கூடாது. அதாவது துடைப்பம் வாங்குவதும் கோதுமை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இவை நம்முடைய முன்னோர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக்கக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







