2025 ஆவணி வளர்பிறை சஷ்டி: தடைகள் விலக இப்படி வழிபாடு செய்யுங்கள்
வளர்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய ஒரு மிகச்சிறந்த நாளாகும். இந்த நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்களை பெறலாம். அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த வளர்பிறை சஷ்டியானது வந்திருப்பது கூடுதல் விசேஷத்தை தருகிறது.
இன்றைய நாளில் நம்முடைய குடும்பத்தில் சில தடைகள் மற்றும் சங்கடங்கள் விலக முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வளர்பிறை சஷ்டிவெள்ளிகிழமைகளில் வந்திருக்கிறது.
பொதுவாகவே இறைவழிபாட்டில் வெள்ளிக்கிழமை மிகச்சிறந்த நாளாகும் . இன்றைய நாளில் வளர்பிறை சஷ்டி வந்திருப்பது மிக மிக விசேஷம் ஆகும். அப்படியாக நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கட்டாயம் முருகனின் அருளால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும்.
வளர்பிறை சஷ்டி தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முருகப்பெருமானை மனதில் நினைத்து வீடுகளில் அவருடைய வேல் அல்லது முருகப்பெருமானுடைய சிலை இருந்தால் அதற்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு இதில் ஏதேனும் 3 பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முடிந்தவர்கள் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். அதோடு வீடுகளில் முருகப்பெருமானுடைய சிலைக்கு முன்பாக நம்முடைய காரியங்களில் வெற்றிகள் கிடைக்க வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும்.
தீராத கடன் பிரச்சனை வீடு கட்ட தொடங்கிய பிறகு பாதியில் நின்று அவதிப்படுபவர்கள் போன்றவர்களும் இந்த வழிபாடு மேற்கொள்வதால் சிறந்த பலனை பெறலாம். அது மட்டும் இல்லாமல் நினைத்த காரியம் நடக்க ஒரு தட்டில் துவரம் பருப்பை பரப்பி வைத்து அதன் மீது இரண்டு அகல் விளக்குகளை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் முருகப்பெருமானுடைய அருளால் விரைவில் நினைத்த காரியம் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







